Actor karthi interview: 104 கிலோ எடை.. டெடி பேர் மாதிரி;கல்லூரியில் தாழ்வு மனப்பான்மை! - சோக பக்கத்தை பகிர்ந்த கார்த்தி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Karthi Interview: 104 கிலோ எடை.. டெடி பேர் மாதிரி;கல்லூரியில் தாழ்வு மனப்பான்மை! - சோக பக்கத்தை பகிர்ந்த கார்த்தி!

Actor karthi interview: 104 கிலோ எடை.. டெடி பேர் மாதிரி;கல்லூரியில் தாழ்வு மனப்பான்மை! - சோக பக்கத்தை பகிர்ந்த கார்த்தி!

Kalyani Pandiyan S HT Tamil
Nov 14, 2023 12:20 PM IST

நடிகர் கார்த்தி தன்னுடைய உடல் எடை அதிகரிப்பு பற்றியும் அதனால் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மை பற்றியும் பேசி இருக்கிறார்.

 கார்த்தி பேட்டி!
கார்த்தி பேட்டி!

இன்னொன்று என்னுடைய அப்பாவின் நல்ல பெயர் எங்களது பின்னாலேயே தொடர்ந்து வரும். எங்கே சென்றாலும் நாங்கள் தனியாக தெரிவோம். ஒளிந்தெல்லாம் ஓட முடியாது.  நாம் எதையும் செய்ய முடியாது. 

நானும் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவன்தான். ஒரு பெண்ணை அப்ரோச் செய்து காதலை சொல்லும் அளவிற்கான தைரியம் எனக்கு அப்போது இல்லை. கல்லூரிக்கு சென்றால், எல்லோருமே என்னை விட அழகாக இருப்பது போன்ற தோன்றும். தாழ்வு மனப்பான்மையானது உச்சத்தில் இருக்கும். அதிலிருந்து எப்படி நான் வெளியே வந்தேன் என்பது இப்போது வரை எனக்கு தெரியவில்லை.

பையா திரைப்படத்திற்கு பிறகு தான் நிறைய பெண்கள் என்னிடம் வந்து, உங்களுடைய வேலை எங்களுக்கு பிடித்திருக்கிறது, உங்களை பிடிக்கும் என்று கூறினார்கள். 

அப்போதுதான் நம்மை கூட பெண்களுக்கு பிடிக்கிறதா என்பது எனக்கு தெரிந்தது. அதை நான் என் வாழ்க்கையில் நீண்ட நாட்களுக்குப் பிறகுதான் உணர்ந்தேன். எடை அதிகமாக இருந்ததால்  ஓட ஆரம்பித்தேன்.  பிரச்சனை என்னவென்றால் எனக்கு அவ்வளவு ஈசியாக உடல் எடை குறையாது. உடல் அவ்வளவு சீக்கிரமாக ரிசல்ட் கொடுத்து விடாது. 

அந்த  சமயத்திலெல்லாம் நான் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகுவேன். ஒரு நடிகனாக நான் மாற வேண்டும் என்று நினைத்த பொழுது கூட, நான் மிகவும் வலிமையான மனிதனாக மாற வேண்டும் என்று தான் நினைத்தேன். பிறகுதான் என்னுடைய உணவு பழக்க வழக்கங்களில் கவனம் செலுத்தினேன்.  70% உங்களது உடல் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ அதை பொறுத்து தான் செயல்படுகிறது. மீதி முப்பது சதவீதம் தான் ஒர்க் அவுட்.  அது குறித்தான புரிதலை நான் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கற்றுக்கொண்டேன். ” என்று பேசினார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.