Kaka Radhakrishnan : திரையுலகில் ஜாம்பவான்.. மறக்கமுடியுமா இவரை.. நடிகர் காகா ராதாகிருஷ்ணன் நினைவு நாள் இன்று!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமைக்குரிய பழம்பெரும் நடிகர் காகா ராதாகிருஷ்ணன் நினைவு நாள் இன்று. இன்றைய தினம் அவரை நினைவுகூறுவோம்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமைக்குரிய பழம்பெரும் நடிகர் காகா ராதாகிருஷ்ணன். அவரது சொந்த ஊர் திண்டுக்கல். ஆனால் திருச்சி சங்கிலியாண்டபுரத்தில்தான் வளர்ந்தார். "காகா" ராதாகிருஷ்ணன் திருச்சி, சங்கிலியாண்டபுரத்தில் வெள்ளையன் ஆச்சாரியார் - சுப்புலட்சுமி அம்மாள் இணையாருக்கு 2ஆவது மகனாக பிறந்தார்.
இவர் தந்தை வெள்ளையன் பொன்மலை இரயில்வே பணிமனையில் வேலை செய்து வந்தார் இராதாகிருஷ்ணனுக்கு இரண்டு வயதிலே அவர் தந்தை உடல் நல குறைவால் இறந்துவிட அவரது குடும்பம் வறுமைக்கு தள்ளபட்டது. அவர் அன்னை சுப்புலட்சுமி அவர்கள் மிகவும் கடினபட்டு ராதாகிருஷ்ணனையும் அவரது அண்ணன் மாணிக்கவிநாயகமூர்த்தியையும் வளர்த்துவந்தார்.
பின்பு அவரது அண்ணன் மாணிக்கவிநாயகமூர்த்திக்கு தந்தையின் வேலை இரயில்வே இலாக்கவில் இருந்து எஞ்சின் ஓட்டுனர் வேலையில் சேர்ந்து சம்பாரிக்க தொடங்கிய பொது ராதாகிருஷ்ணனை படிக்க வைக்க தொடங்கிய போதும் அவருக்கு படிப்பில் ஆர்வம் இல்லாமல் தெரு கூத்து நாடகத்தில் கலை ஆர்வம் பிறக்க நாடக குழுவுடன் சேர்ந்து அவரது நடிப்பு பயணத்தை தொடங்கினார்.
இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி பெயர் விசாலாட்சி. இவருக்கு 2 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். 2-வது மனைவி பெயர் சாரதாம்பாள். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். 16 பேரன் பேத்திகள் உள்ளனர். இவர் 6 வயதில் இருந்து நாடகத்தில் நடித்தவர். நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் நாடகக்குழுவில் நீண்ட காலம் நடித்தார். மங்கையர்க்கரசி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் நடித்தபோது ஒருமரத்தில் ஏறி காக்கா பிடித்தவாறு நடித்திருந்தார். அதில் இருந்து அவர் காகா ராதாகிருஷ்ணன்' என்று அழைக்கப்பட்டார்.
அதாவது இராதாகிருஷ்ணன் தன்னுடைய முதல் திரைப்படமான மங்கையர்க்கரசியில், வேலையில் சேர்வதற்காகக் காக்காப் பிடிக்க வேண்டி அவருடைய தாயார் கூறியதும், உண்மையான காகத்தைப் பிடித்துக் கொண்டு போய் வேலை கேட்பார். அக்காலத்தில் அந்நகைச்சுவைக் காட்சி மிகவும் பிரபலம். அதன் காரணமாகவே, இவர் காகா இராதாகிருஷ்ணன் என்று அழைக்கப்பட்டார்.
இதுவரை 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நல்லதம்பி, வண்ணசுந்தரி, சந்திர கிரி, மங்கையர்க்கரசி, உத்தமபுத்திரன், மனோகரா, தாய் மகளுக்கு கட்டியதாலி, தாய்க்குப்பின் தாரம், வந்தாளே மகராசி ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை. சிவாஜியுடன் நடித்த மனோகரா, கமலுடன் நடித்த குணா, தேவர்மகன், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், அஜீத்துடன் நடித்த உன்னைத்தேடி, விஜய்யுடன் நடித்த காதலுக்கு மரியாதை ஆகியவை அவர் நடித்த படங்களில் குறிப்பிடத்தகுந்தவை. மாயி படத்தில் அவரும் வடிவேலுவும் நடித்த காமெடி காட்சிகள் மிகவும் பேசப்பட்டவை.
1957 -இல் வெளிவந்த மாடர்ன் தியேட்டர்ஸாரின் வெற்றிப்படமான ஆரவல்லி படத்தில் இவர் ஆராய்ச்சி என்ற கதாப்பாத்திரத்தில் எஸ்.ஜி.ஈஸ்வரின் நண்பனாக நடித்திருப்பார். ஏதேனும் சந்தேகம் கேட்டால் ஒரு நூல் திரியை காதில் வைத்து குடைந்து கொண்டு சரியான பதிலைச் சொல்வார்.இப்படத்தில் அருமையாக தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருப்பார்.
மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இராதாகிருஷ்ணன் ஜூன் 14 ஆம் தேதி 2012 அன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். இன்று இவரின் நினைவுநாள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்