Top 10 Cinema News : விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா, பாடகர் மனோ மகன்கள் மீது வழக்கு.. இன்றைய டாப் 10 சினிமா செய்திகள்!
Top 10 Cinema News : ஹிப் ஆப் ஆதியின் கடைசி உலகப் போர், விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா, பாடகர் மனோ மகன்கள் மீது வழக்கு என இன்றைய டாப் 10 தமிழ் சினிமா செய்திகள் பற்றி பார்க்கலாம்.

ஹைவேயில் நடந்த விபத்து..பொறுமை இழந்து திட்டிய ஜீவா!
சேலத்தில் இருந்து சென்னைக்கு மனைவியுடன் காரில் சென்றபோது ஹைவேயில் நடிகர் ஜீவா விபத்தில் சிக்கியுள்ளார். விபத்தை ஏற்படுத்த காரணமாக இருந்த வாகன ஓட்டி மீது ஜீவா புகார் அளித்துள்ளார். விபத்தின் நடத்த இடத்தில் பொறுமை இழந்த நடிகர் ஜீவா ஒருவரை திட்டிய விடியோ வெளியாகியுள்ளது.
ஹீரோவாக அருண் விஜய்..முக்கிய கேரக்டரில் தனுஷ்!
பவர் பாண்டி என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமான நடிகர் தனுஷ், அதன் பின்னர் இரண்டாவதாக ராயன் படத்தை இயக்கினார். தான் இயக்கிய முதல் இரண்டு படங்களிலும் அவரே முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து மூன்றாவது படமாக தனுஷ் இயக்கி வரும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் ப்ரியா பிரகாஷ் வாரியர். அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ் என இளம் நடிகர்கள் நடிக்கிறார்கள். ரெமான்டிக் காமெடி பாணியில் உருவாகும் இந்த படத்தை தனது உண்டர்பார் நிறுவனம் மூலம் தனுஷ் தயாரிக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து அவர் இயக்க இருக்கும் நான்காவது படத்தில் அருண் விஜய் கதையின் நாயகனாக நடிக்கிறார். முதல் முறையாக இன்னொரு ஹீரோவை இயக்க இருக்கும் தனுஷ், இந்த படத்தை முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹிப் ஆப் ஆதியின் கடைசி உலகப் போர்
ஹிப் ஆப் தமிழா ஆதி முதல் முறையாக தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஹிப் ஆப் தமிழா எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் எழுதி, இயக்கி நடித்துள்ள படம் கடைசி உலகப்போர். இதன் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி, சென்னை திருவேற்காடு அடுத்த நூம்பலில் நடைபெற்றது.இதில், திரைப்படத்தின் கதாநாயகி அனகா, நட்டி நடராஜன், சிங்கம்புலி, அழகன் பெருமாள், தலைவாசல் விஜய், ஹரிஷ் உத்தமன், கல்யான் மாஸ்டர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் சுந்தர் சி கலந்து கொண்டு திரைப்படத்தின் ஃப்ரி ரிலிஸை வெளியிட்டார்.