Harish Kalyan Marriage: நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு நாளை திருமணம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Harish Kalyan Marriage: நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு நாளை திருமணம்

Harish Kalyan Marriage: நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு நாளை திருமணம்

Aarthi V HT Tamil
Oct 27, 2022 02:12 PM IST

நடிகர் ஹரிஷ் கல்யாண், நர்மதா உதயகுமாருக்கு நாளை திருமணம் நடைபெற உள்ளது.

ஹரிஷ் கல்யாணுக்கு நாளை திருமணம்
ஹரிஷ் கல்யாணுக்கு நாளை திருமணம்

தசரா விழாவில் நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது மட்டுமல்லாமல், தனது வருங்கால மனைவி நர்மதா உதயகுமாரையும் அறிமுகப்படுத்தினார். 

இந்நிலையில் ஹரிஷ் கல்யாண், நர்மதா உதயகுமாருக்கு நாளை (அக்டோபர் 28) தேதி திருமணம் நடைபெற உள்ளது. 

சென்னை திருவேற்காட்டில் உள்ள ஜிபிஎன் பேலஸ் திருமண மண்டபத்தில் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் திருமணம் நடைபெறும் என ஹரிஷ் கல்யாண் தெரிவித்தார். 

செய்தியாளர்களிடம் பேசிய ஹரிஷ், ”எங்கள் திருமணம் பெரியவர்களால் நிச்சியம் செய்த ஒன்று. காதல் திருமணம் இல்லை. எங்களுக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. 

எங்கள் திருமணத்திற்கு உறவினர்களுடன் வந்து ஆசிர்வாதம் செய்யுங்கள். என் வாழ்க்கைத் துணையை நான் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார். 

அவர் நடிப்பில் கடைசியாக 2021 ஆம் ஆண்டு 'ஓ மணப்பெண்ணே’ படம் வெளியானது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.