Harish Kalyan: இவர் தான் என் மனைவி… போட்டோவுடன் ஹரீஷ் கல்யாண் அறிவிப்பு
நடிகர் ஹரீஷ் கல்யாண் தன் வாழ்க்கை துணையின் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.
நடிகர் ஹரீஷ் கல்யாண் தனது வாழ்க்கை துணையோடு கைகோர்த்து இருக்கும் புகைப்படத்தை இன்று பதிவிட்டார். அதில், 'புதிய மங்களகரமான தொடக்கம்' எனக் குறிப்பிட்டு இருந்தார்.
இதை பார்த்த ரசிகர்கள் யாரை திருமணம் செய்ய போறீங்க, அவர் புகைப்படத்தை பதிவிடுங்கள் என கேட்டனர்.
இந்நிலையில் ரசிகர்களின் தொடர் கோரிக்கை ஏற்று ஹரீஷ் கல்யாண் தன் வாழ்க்கை துணை புகைப்படத்தை வெளியிட்டு அறிக்கை ஒன்றையும் பதிவிட்டு உள்ளார்.
அதில், “அன்புள்ள அனைவருக்கும், என்னுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே எந்த நிபந்தனைகளும் அற்ற அன்பையும் பாசத்தையும் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கும் அதிரஷ்டம் எனக்கு கிடைத்தது.
என்னுடைய ஒவ்வொரு சிறிய கனவையும் என் பெற்றோர் ஊக்குவித்தார்கள். அதுபோலவே இப்போது நீங்கள் அனைவரும் எனக்கு மிகவும் அன்பையும் ஆதரவையும் காட்டி வருகிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சினிமா உலகில் எனது சிறு சிறு வெற்றிகளை பதிக்க உதவியவர்கள், ஒவ்வொரு வெற்றியையும் மைல்கல்லையும் உங்களுடன் பகிர்ந்துகொள்வது எனது பயணத்தின் மிகவும் திருப்திகரமான பகுதியாகும்.
இப்போது மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், எனது தனிப்பட்ட வாழ்க்கையில் துவங்க உள்ள முக்கியமான பயணத்தின் தொடக்கத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எழுதுகிறேன். எங்கள் பெற்றோர்கள் குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள், அன்பான ரசிகர்கள், ஊடகங்கள்/பத்திரிக்கை நண்பர்கள் மற்றும் எனது நலம் விரும்பிகள் அனைவரின் ஆசியுடன், நர்மதா உதயகுமார் உடனான எனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
எங்களை நாங்களே புதுப்பித்துக் கொள்ளும் இந்த புதிய வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கும் நேரத்தில், இப்போதும் எப்போதும் உங்கள் அனைவரிடமிருந்தும் இரட்டிப்பு ஆசீர்வாதங்களையும் அன்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என குறிப்பிட்டு உள்ளார்.
டாபிக்ஸ்