பென்ஸ் காரை நொறுக்கும் சண்டைக் காட்சி..எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்தில் சிக்கிய ஹீரோ - சிறு காயங்களுடன் எஸ்கேப்
பென்ஸ் காரை நொறுக்கும் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டபோது எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்தில் சிக்கினார் மகேஸ்வரா படத்தின் ஹீரோ ஹம்சவர்தன். இந்த விபத்தில் சிறு காயங்களுடன் எஸ்கேப் ஆகியுள்ளார்.

மறைந்த பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் மகன் ஹம்சவர்தன். தமிழில் இவர் மானசீக காதல் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். தொடர்ந்து புன்னகை தேசம், ஜூனியர் சீனியர், மந்திரன் போன்ற படங்களில் நடித்துள்ள படப்பிடிப்பின்போது விபத்தில் சிக்க காயமடைந்துள்ளார்.
தற்போது இவர் நாயகனாக நடிக்கும் 'மகேஸ்வரா' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெற்றது. மோகன் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஹரா' படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி இயக்குகிறார்.
சண்டைக்காட்சியின் போது விபத்து
படத்தில் உயர்ரக சொகுசு பென்ஸ் கார் ஒன்றை நொறுக்கி தரைமட்டமாக்கும் சண்டைக் காட்சி, அரியலூர் நெடுஞ்சாலையில் ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் சுப்பராயன் தலைமையில் படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத வகையில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சிறு காயங்களுடன் ஹம்சவர்தன் உள்ளிட்டோர் தப்பியுள்ளனர்.