Goundamani: அந்த ரோடு என்ன விலை.. கவுண்டமணி சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
கவுண்டமணி சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
![கவுண்டமணி கவுண்டமணி](https://images.hindustantimes.com/tamil/img/2023/05/25/550x309/gound_1684992832933_1684992838251.jpg)
தமிழ் சினிமாவில் 90ஸ் காலத்தில் தவிர்க்க முடியாத இரண்டு நட்சத்திர நடிகர்கள் கவுண்டமணி- செந்தில். இவர்களின் நகைச்சுவைக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. கவுண்டமணி - செந்தில் காமெடி காட்சிகள் இன்னமும் நகைச்சுவை சேனலில் வந்தால் வாய் விட்டுச் சிரிக்க வைக்கும்.
1964 ஆம் ஆண்டு நாகேஷ் ஹீரோவாக நடித்த சர்வர் சுந்தரம் படத்தில் கார் டிரைவராக சின்ன ரோலில் நடித்து சினிமாவில் அறிமுகமானார் கவுண்டமணி. பின்னர் பாரதிராஜா இயக்கத்தில் கமல் ஹாசன், ரஜினிகாந்த் நடித்த 16 வயதினிலே படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். 1977 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அவர் சுமார் 300 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து கலக்கி இருக்கிறார்.
இதனிடையே கவுண்டமணி இன்று தனது 84 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவர் வயது மூப்பு காரணமாக சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் ஒய்வு எடுத்து வந்தார். இதனையடுத்து கவுண்டமணி சமீபத்தில் ஒரு படத்தில் மீண்டும் ஹீரோவாக நடிக்க கமிட்டாகி ஷூட்டிங் சென்று உள்ளார். அது மட்டுமில்லாமல் நடிகர் சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் பெரியப்பா கதாபாத்திரத்தில் நடிக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் 300 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த கவுண்டமணி 40 முதல் 50 கோடி ரூபாய் வரை சொத்து மதிப்பு வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சொத்து வைத்து அவர் செல்வ செழிப்புடன் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. நாகேஷுக்கு பிறகு அதிக சம்பளம் வாங்கிய நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
![Whats_app_banner Whats_app_banner](/_next/static/media/WhatsappChnlmob.efd407a6.png)
டாபிக்ஸ்