Actor Dev Anand: சிவகார்த்திகேயன் மீது எனக்கு பொறாமையா? - தேவ் ஆனந்த் பதில்!
சிவகார்த்திகேயன் மீது தான் பொறாமை படுவதாக எழுந்த கமெண்டுகளுக்கு, நடிகர் தேவ் ஆனந்த் பதில் அளித்திருக்கிறார்,
இது குறித்து கலாட்டா சேனலுக்கு அண்மையில் பேசிய அவர், “சீரியல் நடிகர்கள் வெப் சீரிஸில் நடிக்க கூடாது என்கிறார்கள் கேட்டால் எங்களுடைய முகம் அதிகமாக பரீட்சமானதாம். எனக்கு என்ன சந்தேகம் என்றால், எப்படி மக்களிடம் பரீட்சயமான முகத்தை படத்தில் கமிட் செய்தால் பாதிப்பு ஏற்படும்.
நான் ஓப்பனாக சொல்கிறேன் நான் கமெண்டுகளை படிப்பதில்லை; அண்மையில் சிவகார்த்திகேயன் குறித்து பேசியது நான் அவரை பார்த்து பொறாமைப்படுகிறேனா என்ற சந்தேகத்தை எழுப்பியதாக கேள்வி கேட்கிறீர்கள்?
விஜய் டிவியில் பாய்ஸ் Vs கேர்ள்ஸ் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனோடு முதன்முறையாக நான் தான் பெண் வேடம் அணிந்து கொண்டு ஆடினேன். சிவகார்த்திகேயன் நன்றாக வளர்ந்த பின்னர், விஜய் டிவியின் ஜோடி சீசன் 6 நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். நான் சீசன் 6 நான் போட்டியாளராக களம் இறங்கி இருக்கிறேன். சிவகார்த்திகேயன் அந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மாறி இருந்தார். அப்போது அவர் நடித்த ரெமோ படத்தில் இடம் பெற்ற கதாபாத்திரத்தை பேசும், நான் அவருடன் பெண் வேடம் அணிந்து ஆடியதை போட்டு காண்பித்தார்கள்.
அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் மடியில் சென்று உட்கார வேண்டும் என்று தயாரிப்பு குழு சொன்னது. நான் அப்போது சிவகார்த்திகேயன் மடியில் சென்று உட்கார்ந்து பேசினேன். அவருக்கு ஒரு அண்ணனாக, எனக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டும் என்று நன்றாகவே தெரியும். இந்த விஷயத்தில் நான் அவர் மீது பொறாமைப்பட்டு எனக்கு என்ன கிடைக்கப் போகிறது? இல்லை, பொறாமை படாமல் எனக்கு என்ன கிடைக்கப் போகிறது. அவருடைய உழைப்பு, அவர் என்று இந்த இடத்தில் இருக்கிறார் எனக்கு இந்த இடம் இன்று கிடைத்திருக்கிறது என்றால் எனக்கு விதிக்கப்பட்ட விதி இவ்வளவுதான்” என்று பேசினார்
டாபிக்ஸ்