“கண்டதும் காதல் ரகம்தான்.. அநியாயத்துக்கு ஒழுக்கமா இருப்பார்.. யாருக்கும் கிடைக்காதது” -சின்னி ஜெயந்த் காதல் கதை
பிரபல நடிகர் சின்னி ஜெயந்த் தன்னுடைய காதல் கதை குறித்து மனம் நெகிழ்ந்து பேசி இருக்கிறார். அந்த பேட்டி இங்கே!

பிரபல காமெடி நடிகரான சின்னி ஜெயந்தும் அவரது மனைவியும் தங்களுடைய காதல் கதையை கலாட்டா யூடியூப் சேனலுக்கு பகிர்ந்து இருக்கிறார்கள்.
காதல் திருமணம் தான்
சின்னி ஜெயந்த் மனைவி பேசும் போது, “எங்களுடைய திருமணம் காதல் திருமணம் தான். ‘கண்டதும் காதல்’ என்று சொல்வார்கள் இல்லையா? அதுபோலத்தான் எங்களுக்குள் அது இயல்பாக நடந்தது. ஆனால், சொல்வதற்கு கொஞ்சம் நேரம் பிடித்தது. சரியான நேரம் வந்தவுடன், நாங்கள் காதலை சொல்லி விட்டோம். முதன் முதலில் என்னுடைய உறவினர் வீட்டில் தான் இவரை பார்த்தேன்.” என்றார்
சின்னி ஜெயந்த் பேசும் போது “ நான் அந்த வீட்டிற்கு விருந்தினராக போயிருந்தேன். அப்போதுதான் இவளை பார்த்தேன். அதன் பின்னர் பெற்றோர்களிடம் பேசி எங்களது திருமணம் நடைபெற்றது.” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே... தொடர்ந்த அவரது மனைவி, “அவர் வீட்டில் மிக மிக ஒழுக்கமாக இருப்பார். அந்த பழக்கம் எங்களுடைய குடும்பத்தினர் எல்லோருக்குமே வந்து விட்டது.