Chaplin balu: ‘சிநேகிதனே சிநேகிதனே; பிச்சைக்காரி கூட படுத்தா எப்படி? நான் விவேக்ட்ட சொன்ன உடனே சட்டுன்னு’-சார்லின் பாலு!
Chaplin Balu: அப்போது எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அதாவது பிச்சைக்காரியாக இருக்கும் அந்தக்கதாபாத்திரத்துடன் இணையும், விவேக்கின் உடம்பிலும் அழுக்கு இருக்க வேண்டும் அல்லவா? இதையடுத்து அந்த ஐடியாவை நான் அவரிடம் சொன்னேன். - சார்லின் பாலு!

Chaplin Balu:பிரபல நடிகரான சார்லின் பாபு யூத் படத்தில் விவேக்கிற்கும், கோவை சரளாவிற்கும் இடையேயான காமெடி குறித்து பேசி இருக்கிறார்.
இது குறித்து தமிழ்நாடு நவ் யூடியூப் சேனலுக்கு பேசிய அவர், “ யூத் திரைப்படத்தில், விவேக் கோவை சரளா நடித்த ‘சிநேகிதனே’ காமெடி காட்சி, மக்கள் மத்தியில் அவ்வளவு பெரிய வரவேற்பை பெற்றது. அந்த காட்சியில், விவேக்கும் கோவை சரளாவும் ஒன்றாக இருந்த பின்னர், இனிமேல் உன் வாழ்க்கையே இருட்டுதான்டா என்று கூறி, நான் லைட்டை ஆன் செய்ய வேண்டும். அந்த காட்சியில் முதலில் கோவை சரளா மட்டும்தான் பிச்சைக்காரி போன்று அழுக்காக இருந்தார்.
அப்போது எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அதாவது பிச்சைக்காரியாக இருக்கும் அந்தக்கதாபாத்திரத்துடன் இணையும், விவேக்கின் உடம்பிலும் அழுக்கு இருக்க வேண்டும் அல்லவா? இதையடுத்து அந்த ஐடியாவை நான் அவரிடம் சொன்னேன். அவர் அதனை உடனே ஏற்றுக்கொண்டார்.