RIP Bijili Ramesh: 'அவரு பண்ண ஒரே தப்பு..எல்லாம் போச்சு'..நடுரோட்டில் கண்ணீருடன் கதறும் பிஜிலி ரமேஷ் மனைவி!
Actor Bijili Ramesh Passed Away: உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் பிஜிலி ரமேஷ் இன்று அதிகாலை காலமானார். கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட தனது நிலைமை குறித்து யூடியூப் சேனல்களுக்கு பிஜிலி ரமேஷ் உருக்கமாக பேட்டியளித்திருந்தனர்.
Actor Bijili Ramesh Passed Away: பிராங் மூலம் சமூகவலைதளங்களில் பிரபலமானவர் பிஜிலி ரமேஷ். தனது நகைச்சுவை வசனத்தால் மக்களிடம் கவனம் பெற்றார். அதன் பிறகு அவருக்கு படவாய்ப்புகளும் கிடைத்தன. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'கோலமாவு கோகிலா' படத்தில் நடித்தார். தொடர்ந்து 'நட்பே துணை', 'காத்துவாக்குல ரெண்டு காதல்', 'கோமாளி', ஜாம்பி, 'பொன்மகள் வந்தாள்' உள்ளிட்ட படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இந்த சூழலில் நடிகர் பிஜிலி ரமேஷுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட தனது நிலைமை குறித்து யூடியூப் சேனல்களுக்கு உருக்கமாக பேட்டியளித்திருந்தார்.
இந்த நிலையில், நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். உடல்நிலை சரியில்லாமல், சில தினங்களாக தீவிர சிகிச்சையில் இருந்தார். மறைந்த பிஜிலி ரமேஷின் இறுதி சடங்கு மாலை 5 மணிக்கு எம்ஜிஆர் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது. பிஜிலி ரமேஷின் மரணத்திற்கு ரசிகர்கள் சமுக வலைத்தளத்தில் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
பிஜிலி ரமேஷ் மனைவி பேட்டி
இந்நிலையில் பிஜிலி ரமேஷின் மனைவி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி தற்போது காண்போரை கண்கலங்க செய்திருக்கிறது. அந்த பேட்டியில் அவர் பேசியதாவது: "குடி பழக்கத்தால் எனது கணவருக்கு கல்லீரல் மொத்தமாக செயலிழந்து விட்டது. கடந்த மாதம் வரை நன்றாகத்தான் இருந்தார். ஆனால், திடீரென மூச்சு வாங்கியது. பிறகு என்னை மருத்துவமனைக்கு கூட்டிட்டு போங்க முடியல என்று சொன்னார். முதன்முதலில் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். அப்போது தான் கல்லீரல், மஞ்சள் காமாலை நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. அங்கு 10 நாட்கள் சிகிச்சை பெற்றார். அதன் பிறகு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தோம்.
"எப்படி சமாளிப்பது என்றுதான் புரியவில்லை"
மருத்துவர்களிடம் நாங்கள் எப்படியாவது இவரது உயிரை காப்பாற்றி கொடுத்துவிடுங்கள் என்று கெஞ்சினோம். அதற்கு அவர்களோ எங்களால் முடிந்தவரை பார்க்கிறோம். அதற்கு மேல் ஆண்டவனை வேண்டிக்கொள்ளுங்கள் என்று கையை விரித்துவிட்டார்கள். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டும் எனக் கூறிவிட்டார்கள். கல்லீரல் வைச்சாலும் அவர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். ஆனால் தனியாரில் செய்தால் 60 லட்சம் ரூபாய் வரை வரும். அந்த அளவுக்கு எங்களிடம் வசதி இல்லை. இவர் சென்ற பிறகு எப்படி சமாளிப்பது என்றுதான் புரியவில்லை.
"நடு ரோட்டில் நிற்கிறோம்"
எனது கணவரின் குடிப்பழக்கத்தால் தான் எல்லாம் போச்சு. எனது மகனை நான் பார்த்துக்கொள்ள வேண்டும். யாராவது பெரிய ஆள் இதை பார்த்தால் எங்களுக்கு உதவி செய்யுங்கள். இந்தக் குடும்பத்தை கண் திறந்து பாருங்க. அதை தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன். குடும்பமே அழிந்துபோய் நடு ரோட்டில் நிற்கிறோம். கண்டிப்பாக யாராவது உதவி செய்வார்கள் என்று நம்புகிறோம்" என்றார் உருக்கமாக அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்