Actor Bala: பாப்பு... பாப்பு... என் உயிரே நீ தான்... இனி உன் அருகில் வரவே மாட்டேன்... கண்ணீர் விட்டு அழுத நடிகர்
Actor Bala: நீ 5 மாத கருவாக இருந்தபோதே உனக்கு பெயரிட்டு மகிழ்ந்தவன் நான். உன்னிடம் போட்டி போட்டு ஜெயிக்க நான் விரும்பவில்லை. நீ என்னுடைய தெய்வம். இனி உன் அருகில் நான் வரவே மாட்டேன் என தனது மகளிடம் கண்ணீர் மல்க பேசியுள்ளார் நடிகர் பாலா.

இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியான பாலா 2003-ல் வெளியான 'அன்பு' என்ற தமிழ் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். 'காதல் கிசு கிசு', 'கலிங்கா' போன்ற தமிழ் படங்களிலும் நடித்தார். அதன் பிறகு மலையாளத்தில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் ஹீரோவாகவும், முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
தமிழில் 'வீரம்' படத்தில் அஜித்தின் தம்பி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் கவனம் பெற்றார். மேலும், ரஜினியின் 'அண்ணாத்த' படத்திலும் நடித்திருந்தார். இவர் தனது மகளிடம் பேசிய வீடியோ ஒன்று இப்போது வைரலாகியுள்ளது.
மலையாளத்தில் பல படங்களில் நடித்து வந்த பாலா, சில ஆண்டுகளுக்கு முன் பாடகி அம்ருதா சுரேஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின் இவர்களுக்கு அவந்திகா என்ற பெண் குழந்தை பிறந்தது.
