Ashok Selvan : நடிகர் அசோக் செல்வனுக்கு டும் டும் டும்? பொண்ணு யாரு தெரியுமா?
பிரபல தயாரிப்பாளர் மகளை நடிகர் அசோக் செல்வன் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவான சூது கவ்வும் படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் அசோக் செல்வன். அப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதையடுத்து பீட்சா 2 வில்லா படம் மூலம் ஹீரோவாக நடித்தார்.
அதன் பிறகு தெகிடி படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை வென்றார்.பின்னர் கூட்டத்தில் ஒருத்தன், ஓ மை கடவுளே, மனமதலீலை, சில நேரங்களில் சில மனிதர்கள் என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்தார். அசோக் செல்வன் சமீபத்தில் நித்தம் ஒரு வானம் என்ற படத்தில் நடித்தார். இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது.
கடந்தாண்டில் அதிக தமிழ் படங்களில் நடித்த ஹீரோவும் அசோக் செல்வன் தான். 2022-ம் ஆண்டில் மட்டும் இவரின் 5 தமிழ் படங்கள் ரிலீஸ் ஆனது. இந்த நிலையில் நடிகர் அசோக் செல்வன் பிரபல தயாரிப்பாளர் ஒருவரின் மகளை காதலித்து வருவதாகவும் இந்த காதலுக்கு இரு வீட்டாரும் பச்சை கொடி காட்டி விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அசோக் செல்வனின் திருமணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
நடிகர் அசோக் செல்வன் தற்போது நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனத்தில் தயாரிப்பில் உருவாகி வரும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து தயாராகி வருகிறது. இதில் அவருடன் சாந்தனுவும் மற்றொரு ஹீரோவாக நடிக்கிறார்.இதையடுத்து நெஞ்சமெல்லாம் காதல் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்