Arya: கிராமத்து நாயகனாக ஆர்யா கலக்கும் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்
Arya new movie title: ஆர்யா - முத்தையா கூட்டணி அமைக்கும் படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டிலை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். முத்தையா பட ஹீரோக்களின் லுக்குக்கு அப்படியே மாறியுள்ளார் சாக்லேட் பாய் லுக்கில் இருக்கும் ஆர்யா.
பேக்கிரவுண்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாட்ஷா பட மானிக் பாட்ஷா வரையப்பட்டிருக்க, அதற்கு முன்னர் பிளாக் அண்ட் பிளாக்கில் ஆர்யா அமர்ந்திருக்க இந்தப் படத்தின் போஸ்டர் உள்ளது. படத்துக்கு காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் என தலைப்பு வைத்துள்ளனர்.
முத்தையா பட ஹீரோக்களின் லுக் கொஞ்சமும் மாறாமல் கருப்பு லுங்கி, மேட்சிங்காக கருப்பு பணியின், அதற்கு மேல் கருப்பு சட்டை, கொஞ்சம் தாடி, கரடுமுரடான முகம், நெற்றில் குங்குமம் என மாறியுள்ளார் சாக்லேட் பாய் ஆர்யா.
இந்தப் படத்தின் போஸ்டர் வெளியீட்டுக்கு முன் ஆர்யா தனது டுவிட்டர் பதிவில், எனக்கு ஆர்யா என்ற ஜம்சத் என குறிப்பிட்டு #EnakkuInnoruPeyairIrukku என்ற ஹேஷ்டாக்குடன், உங்க இன்னொரு பெயர் என்ன பாஸ்? என கேள்வி கேட்டிருந்தார்.
இதற்கு நடிகர் கார்த்தி, ஜிவி பிரகாஷ் குமார், இயக்குநர் வெங்கட் பிரபு, உள்பட பிரபலங்கள் பலரும் ஆர்யா ஸ்டைலில் தங்களது பெயர்களுடன், தங்களின் இன்னொரு பெயரையும் சேர்த்து பதிவிட்டனர்.
இதைத்தொடர்ந்து தற்போது புதிய படத்தின் போஸ்டரும், அதன் தலைப்பையும் ஆர்யா பகிர்ந்துள்ளார். இதுவரை முழு நீள காதல், ஆக்ஷன், பேமிலி எண்டர்டெயின்மெண்ட் படங்களில் நடித்துள்ள ஆர்யா முத்தையா இயக்கத்தில் இந்தப் படத்தில் கிராமத்து நாயகான தோன்றவுள்ளாராம்.
சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்த சித்தி இத்னானி, ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். படத்துக்கு இசை - ஜி.வி. பிரகாஷ்குமார். ஒளிப்பதிவு - வேல்ராஜ்.
நாளை ஆர்யா தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ள நிலையில், இன்று அவரது புதிய படமான காதர்பாட்சா என்ற முத்துராமிலங்கம் படத்தின் போஸ்டார் வெளியிடப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்