Sinam trailer release: அருண் விஜய் படத்தின் டிரெய்லர் வெளியீடு!
அருண் விஜய்யின் நடிப்பில் உருவான சினம் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
ஜி.என்.ஆர் குமரவேல் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சினம். சில சிக்கல்கள் காரணமாகப் படம் முடிவடைந்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிவராமல் இருந்தது.
இந்த படத்தில் பல்லக் லால்வாணி, காளி வெங்கட் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் காவல்துறை அலுவலராக அருண் விஜய் நடித்துள்ளார்.
இப்படத்தை மூத்த நடிகரும் நடிகர் அருண் விஜய்யின் அப்பாவுமான விஜயகுமார் தயாரித்துள்ளார். இப்படத்தின் தயாரிப்பு பணிகள் ஆனது நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது.
தற்போது திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகத் தயாராக இருக்கும் இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 16ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. தற்போது இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கிரைம், திரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டி உள்ளது.
டாபிக்ஸ்