Actor Appas: அடிபுரண்ட அப்பாஸ்..ஆப்பு வைத்த மேனேஜர்; கண்ணாடியாய் நொறுங்கிய கனவுநாயகன்! - கண்ணீர் கதை!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Appas: அடிபுரண்ட அப்பாஸ்..ஆப்பு வைத்த மேனேஜர்; கண்ணாடியாய் நொறுங்கிய கனவுநாயகன்! - கண்ணீர் கதை!

Actor Appas: அடிபுரண்ட அப்பாஸ்..ஆப்பு வைத்த மேனேஜர்; கண்ணாடியாய் நொறுங்கிய கனவுநாயகன்! - கண்ணீர் கதை!

Kalyani Pandiyan S HT Tamil
Jul 26, 2023 06:00 AM IST

அப்பாஸ் குறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பகிர்ந்த தகவல்கள் இவை!

நடிகர் அப்பாஸ்!
நடிகர் அப்பாஸ்!

இயக்குநர் கதிருக்கு எந்த கதாநாயகர்களும் திருப்தியாக அமையவில்லை. இந்த நிலையில் தான் மும்பையில் இருந்து ஒரு போட்டோ ஒன்று வருகிறது. அது நடிகர் அப்பாஸ் உடைய போட்டோ. 

அப்பாஸுக்கு பூர்வீகம் கொல்கத்தா. அவரது குடும்ப உறுப்பினர்கள் ஏதாவது ஒரு வழியில் சினிமாவுடன் தொடர்பில் இருந்தார்கள். காதல் தேசம் திரைப்படம் வெளியான பின்னர் அப்பாஸுக்கு மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. திரும்பிய இடமெல்லாம் ஒரே அப்பாஸ்மயமாக இருந்தது. 

அந்தப் படத்தின் வெற்றி, அவருக்கு அதன் பின்னர் பல வாய்ப்புகளை பெற்றுத் தந்தது. இதனிடையே அவரது மேனேஜராக பணியாற்றியவர் அப்பாஸை புக் செய்ய வருபவர்களிடம் கதையை கூட கேட்காமல், வருகிற வரலட்சுமியை விட்டுவிடக்கூடாது என்று சொல்லி பணத்தை வாங்கி வாங்கி போட்டுக் கொண்டார். 

இப்படியாக கிட்டத்தட்ட 18 படங்களுக்கு அவர் அட்வான்ஸ் வாங்கி விட்டார். அப்பாஸூக்கான கதையையும் அவரது மேனேஜர் தான் கேட்டார். கதையின் ஒன்லைனை மட்டும் தான் அப்பாஸுக்கு அவர் சொல்வார். அதனைக்கேட்டும் அப்பாஸோ,  நம்பிக்கையின் பேரில் உங்களுக்கு சரி என்று பட்டால் நீங்கள் தாராளமாக செய்யுங்கள் என்று சொல்லிவிடுவார்.

இந்த நிலையில்தான் இயக்குநர் ஷங்கர் ஜீன்ஸ் படத்தின் கதையை எடுத்துக்கொண்டு அதில் அப்பாஸை நடிக்க வேண்டும் என்று  கூறி அவரது மேனேஜரை அணுகினார். ஆனால் அவரோ கால் ஷீட்கள் அனைத்தும் காலியாகி விட்டன என்று சொல்லிவிட்டார். இதனையடுத்து அந்த படமானது நடிகர் பிரசாந்துக்கு சென்றது. 

இதே போல இயக்குனர் பாசில் அப்பாஸின் மேனேஜரிடம் கால்ஷீட் கேட்டார். ஆனால் அவருக்கும் அதே பதில் கொடுக்கப்பட்டது. அந்த திரைப்படம் அப்படியே விஜய்க்கு சென்றது. அதுதான் காதலுக்கு மரியாதை. இதனிடையே அப்பாஸ் நடிப்பில் வெளியான மூன்று படங்களும் பிளாப் ஆகிவிட்டன

அனைத்து அட்வான்ஸ் தொகையையும் திருப்பிக் கொடுக்க வேண்டிய நிலை வந்து விட்டது. பழைய நிலைமைக்கு அப்பாஸ் வந்துவிட்டார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான அப்பாஸ் கிட்டத்தட்ட மூன்று நாட்கள் ஹோட்டல் அறையிலேயே தங்கியிருந்தார். 

இதனையடுத்து மூன்று நாட்களுக்கு பிறகு வெளியே வந்தவர் தன்னுடைய மேனேஜர் உட்பட அனைவரையும் மாற்றினார். அதன் பின்னர் சில படங்களில் அவர் நடித்தார். ஆனால் அந்த படங்கள் எதுவும் பெரிதாக கை கொடுக்கவில்லை. இதனையடுத்து பொருளாதார ரீதியாக அவர் மிகுந்த சிக்கல் ஏற்பட்டது.

அதன் பின்னர் சின்ன சின்ன ரோல்களில் கூட இறங்கி வந்து நடிக்க ஆரம்பித்தார். அப்படி வாழ்க்கை சென்று கொண்டிருக்க கல்லூரிக்கு ஒன்றிற்கு அவர் சிறப்பு விருந்தினராக சென்று இருந்தார். அப்போது அவரைப் பார்த்த மாணவர்கள் செல்போனுடன் ஓடி வந்தனர். இதை பார்த்த அப்பாஸ் இவ்வளவு படங்களில் நாம் தோல்வியைச் சந்தித்த போதும், நம்மை தேடி இவ்வளவு ரசிகர்கள் வருகிறார்கள் என்று என் எண்ணினார். ஆனால் வந்தவர்கள் அவரை விட்டுவிட்டு அவர் வந்திருந்த காரை போட்டோ எடுத்தார்கள். காரணம் அவர் வந்த கார் மாருதி 800 எப்படி இருந்த நடிகர் என்று இப்படிப்பட்ட காரில் வந்திருக்கிறார் என்ற ஆச்சரியம் அவர்களுக்கு ஏற்பட்டது. இதனால் மனம் சொந்து அவர் அந்த விழாவில் பங்கேற்கவில்லை என்று கூட செய்திகள் உள்ளன.

இது அவருக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. இந்த நிலையில் தான் அவரின் நண்பர் அவரை நியூசிலாந்துக்கு அழைத்தார். அதன் பின்னர் நியூசிலாந்துக்கு சென்று அவர் அங்கு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்தார்

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.