HBD Anand Babu: பிரபுதேவாவின் இன்ஸ்பிரேஷனாக இருந்தவர்! டான்ஸ் மட்டுமல்ல பல்வேறு கலைகளின் வித்தகர்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Anand Babu: பிரபுதேவாவின் இன்ஸ்பிரேஷனாக இருந்தவர்! டான்ஸ் மட்டுமல்ல பல்வேறு கலைகளின் வித்தகர்

HBD Anand Babu: பிரபுதேவாவின் இன்ஸ்பிரேஷனாக இருந்தவர்! டான்ஸ் மட்டுமல்ல பல்வேறு கலைகளின் வித்தகர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 30, 2023 06:15 AM IST

அபார நடனம் மட்டுமில்லாமல் குறுப்புத்தனமான நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்த நடிகராக திகழ்ந்து வந்தவர் ஆனந்த் பாபு. இடையில் சில காலம் காணாமல் போயிருந்தாலும் தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் குறிப்பாக டிவி சீரியல்களில் கலக்கி வருகிறார்.

நடிகர் ஆனந்த் பாபு (கோப்புப்படம்)
நடிகர் ஆனந்த் பாபு (கோப்புப்படம்)

திரையுலகில் ஆனந்த் பாபு பிரபலமான நடிகர் ஆவதற்கு முன்பு அவர் காமெடி நடிகர் நாகேஷ் மகன் என்பது பலருக்கும் தெரியவில்லை. டி. ராஜேந்தர் இயக்கிய தங்கைக்கோர் கீதம் படம் மூலம் நடிகராக அறிமுகமானார் ஆனந்த் பாபு.

தமிழ் சினிமாவில் டிஸ்கோ டான்ஸ் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த முதல் நடிகர் என்றே ஆனந்த் பாபுவை கூறலாம். தனது படங்களில் அற்புதமான நடன அசைவுகளால் ரசிகர்களை கவர்ந்த ஆனந்த் பாபு, பாடும் வானம்பாடி படம் மூலம் ஹீரோவானார். பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி நடித்த பாலிவுட் திரைப்படமான டிஸ்கோ டான்ஸர் படத்தை அடிப்படையாக வைத்து வெளியான பாடும் வானம்பாடி சூப்பர் ஹிட்டானதுடன் ஆனந்த் பாபுவுக்கும் நல்ல பெயரை பெற்று தந்தது.

இந்த படத்துக்கு பின்னர் ஹீரோ, ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஆனந்த் பாபு, பட்ஜெட் கதாநாயகனாக வலம் வந்தார். தமிழ் தவிர தெலுங்கு, மலையாள படங்ளிலும் நடித்து வந்தார்.

தொடர்ந்து பிரதான கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்த ஆனந்த் பாபு 1999க்கு பிறகு சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் நடிப்பை விட்டு ஒதுங்கினார்.

இருப்பினும் டிவி சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்தார். 2000ஆவது ஆண்டு முதல் 2007 வரை பிரபலமான சீரியல்களான சூலம், குலவிளக்கு, மனைவி, கல்தூரி போன்றவற்றில் நடித்தார்.

தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மனஉளைச்சலுக்கு ஆளான அவர் சீகரெட், மதுபழக்கத்தினால் அவதிப்பட்டார். பொருளதார நெருக்கடியில் இருந்து மீண்டு 2009இல் வெளியான ஒளியும் ஒலியும் என்ற படம் மூலம் கம்பேக் கொடுத்தார். அதே ஆண்டில் மதுரை சம்பவம், சூர்யா நடித்த ஆதவன் ஆகிய படங்களிலும் நடித்தார். இதில் ஆதவன் படத்தில் ஆனந்த் பாபு - வடிவேலு காம்போவின் காமெடி வெகுவாக பேசப்பட்டது.

தற்போது சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் தலை காட்டி வரும் ஆனந்த் பாபு, சீரியல்களிலும் நடித்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மெளன ராகம் தொடரில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் மிரட்டி வருகிறார்.

நடனம் என்றாலே உலகமே மைக்கேல் ஜாக்சன் என வியந்து பார்த்து இருக்க, தான் சிறுவயதில் பார்த்து மெய்சிலிர்த்த ஹாலிவுட் டான்ஸரான ஜீன் கெல்லியை இன்ஸபிரேஷனாக வைத்து, தனது டான்ஸ் ஸ்டெப்புகளை விதை போட ஆரம்பித்துள்ளார் ஆனந்த் பாபு. சொல்லப்போனால் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று சொல்லப்படும் பிரபுதேவாவின் ரியல் இன்ஸ்பிரேஷன், இவர்தான் என்பது பலருக்கும் தெரிந்திடாத விஷயம்

டிஸ்க்கோ என்றாலே ஒரே அசைவுகளை கொண்டிருந்த 1960, 70 சினிமாக்களில் காண்பிக்கப்பட்டது. ஆனால் அதில் வேறு மாதிரியான ஸ்டப்களையும், மூவ்மெண்ட்களையும் வெளிப்படுத்தலாம் என்பதை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் ஒருவர் ஆனந்த் பாபு என்று சொன்னால் மிகையாகாது.

ஆனந்த் பாபுவின் அசத்தலான நடனத்தை பார்த்து மெய்சிலிர்த்தவர்கள், அவரது நடனத்தை பார்ப்பதற்காக விஎச்எஸ் கேசட்களை வாங்கி பார்த்து வீட்டில் வைத்தே பயிற்சி செய்தவர்கள் ஏராளம். இப்போது தொழில்நுட்ப வளர்ச்சியாக வந்திருக்கும் ஷார்ட் விடியோ போன்ற அம்சங்களை அப்போது இருந்திருந்தால் நிச்சயம் ஆனந்த் பாபு டான்ஸ் ஸ்டப்புகளால் ஆன விடியோக்கள் குவியும் என்பதை அவரது என்பதை நிச்சயம் மறுக்க முடியாது.

ஆனந்த் பாபுவுக்கு நடனத்தையும் மீறி ஸ்கிப்பிங் ஆடிக்கொண்டே நடனம் ஆடுவது, பியானோ வசிப்பது போன்ற பல்வேறு திறமைகளை கொண்டவராக உள்ளார். சிறந்த டென்னிஸ் வீரரான அவருக்கு, மருத்துவர் ஆக வேண்டும் என்பது கனவாக இருந்தாலும், சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தார் தற்போது இரண்டாவது இன்னிங்ஸிலும் கலக்கி கொண்டிருக்கிறார். தனது அபார நடனத்தால் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்திய கலைஞனாக இருந்து வந்த ஆனந்த் பாபுவுக்கு இன்று 60வது பிறந்தநாள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.