Ajith New Look: கிளீன் ஷேவ்… நியூ லுக்கில் கலக்கும் அஜித்
நடிகர் அஜித்தின் புதிய லுக் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
தமிழ் சினிமாவின் இரண்டு டாப் ஹீரோக்களானஅஜித், விஜய் நடித்துள்ள படங்கள் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. கிட்ட தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு இவர்களின் படங்கள் மோத இருப்பதால் தியேட்டர்கள் திருவிழாவாக மாற போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
வாரிசு மற்றும் துணிவு படக்குழு அடிக்கடி புதிய போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களின் வெறித்தனத்தை தூண்டி வருகின்றன.
இந்நிலையில் நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் பணிகள் மும்மரமாக நடந்து வருகிறது. அடுத்த மாதம் அடுக்கடுக்காக அப்டேட்கள் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதில் தாடி, மீசையுடன் டெரர் லுக்கில், காதில் கடுக்கனுடன் அஜித் மாஸாக நடித்து உள்ளார்.
இந்நிலையில் அஜித் தற்போது மீண்டும் பழையபடி க்ளீன் ஷேவ் லுக்கில் மாறியுள்ள புதிய புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. தேவ் சக்திவேல் என்ற செலிபிரிட்டி ஹேர் ஸ்டைலிஸ்ட் அஜித்தின் இந்த லுக்கை உருவாக்கியுள்ளார்.
தாடி மற்றும் தாடி இல்லாத லுக்கில் அஜித் இருப்பதால், துணிவு படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளாரா என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.
மறுபக்கம் அஜித்தின் இந்த புதிய லுக் அவர் அடுத்தாக விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிப்பதற்காக இருக்கும் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
டாபிக்ஸ்