தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actess Kiran Rathod Celebrating Her Birthday Today

HBD Kiran Rathod: "மார்கண்டேயா நீ வருவாயா?", "கட்ட கட்ட நாட்டுகட்ட" - தமிழ் ரசிகர்களை கிறங்கடித்த கவர்ச்சி பாம் கிரண்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 11, 2024 06:30 AM IST

தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி பின்னர் கவர்ச்சி நடிகையாக உருவெடுத்து ரசிகர்களுக்கு கவர்ச்சி தரிசனம் தந்து கிறங்கடித்தவர் கிரண். ஹீரோயினாக நடித்த குறுகிய காலத்திலும் கமல்ஹாசன், விஜயகாந்த், அஜித் குமார் என டாப் நடிகர்களுக்கு ஜோடியானார்.

கோலிவிட்டில் ஹீரோயினாக கலக்கிய நடிகை கிரண்
கோலிவிட்டில் ஹீரோயினாக கலக்கிய நடிகை கிரண்

ட்ரெண்டிங் செய்திகள்

ராஜஸ்தான் தலைநகர் ஜெயிப்பூரை சேர்ந்தவரான இவர், பாலிவுட் நடிகை ரவீனா டண்டனின் உறவினராவார். எனவே இவருக்கும் சினிமாவுக்கு தொடர்பு என்பது ஹீரோயினாக ஆவதற்கு முன்பே இருந்து வந்தது.

கல்லூரி முடித்து மாடலிங், பாப் ஆல்பம் செய்து கொண்டிருந்த முதலில் இந்தி படத்தில் நடித்தார். இந்தி புதுமுக நடிகைகளுக்கு ஆதரவு கரம் நீட்டுவதில் முதன்மையாக இருக்கும் டோலிவுட், கிரணின் சேவையை நாட அங்கிருந்து தமிழுக்கு அழைத்து வந்தார் இயக்குநர் சரண்.

2002 கோடை விடுமுறையில் வெளியாகி, ஆண்டின் சூப்பர் ஹிட் படமாக அமைந்த ஜெமினி படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்தார் கிரண். தமிழில் அமர்க்களமாக அறிமுகம் கிடைக்க அடுத்து அஜித்துக்கு ஜோடியாக வில்லன், கமலுக்கு ஜோடியாக அன்பே சிவம் படங்களில் கமிட்டாகி கவர்ச்சியுடன், சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்தினார்.

இடையே இந்தி, மலையாளம் மொழி படங்களிலும் நடித்தார். தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்து சரத்குமார், அர்ஜுன் ஜோடியாக நடித்தார். கல்ட் கிளாசிக்காக அமைந்த அன்பே சிவம் படத்துக்கு பிறகு மீண்டும் சுந்தர் சி இயக்கத்தில் வின்னர் படத்தில் நடித்தார். இந்த படத்தில் பிராசாந்துக்கு ஜோடியாக கவர்ச்சியில் தாராளம் காட்டியிருப்பார்.

குறிப்பாக படத்தில் இடம்பெறும் எந்த உயிர் தோழி என்ற பாடலில் கவர்ச்சியின் உச்சத்துக்கு சென்றிருப்பார். விஜயகாந்துக்கு ஜோடியாக தென்னவன் என்ற படத்தில் இடையே, சில படங்களில் குத்தாட்டமும் போட்டு வந்தார்.

அப்படி விஜய்யின் கமர்ஷியல் ஹிட்டான திருமலை படத்தில் வாடியம்மா ஜக்கம்மா பாடலில் குத்தாட்டம் போட்டார். எஸ்ஜே சூர்யாவின் நியூ படத்தில் மாமி கதாபாத்திரத்தில் சிறிய கேரக்டரில் தோன்றிய கிரண் டபுள் மீனிங் வசனம், கவர்ச்சி என விருந்து படைத்திருப்பார். மார்கண்டேயா நீ வருவாய என்று அந்த படத்தில் இடம்பெறும் பாடலில் பல ஷாட்கள் சென்சாரின் கத்தரிகளுக்கு இறையாகும் விதமாக தாராளம் காட்டியிருப்பார்.

இந்த படத்துக்கு பின்னர் கவர்ச்சி நடிகையாக உருவெடுத்த கிரண், தமிழில் ஹீரோவாக நடிப்பது குறைந்தது. மாறாக கவர்ச்சி நடிகையாக பல படங்களில் தோன்ற ஆரம்பிப்பார்.

தமிழ் தவிர தெலுங்கு, கன்னட சினிமாக்களிலும் நடித்து வந்த கிரண் இன்னும் திருமணம் செய்து கொள்ளமலேயே இருந்து வருகிறார். தமிழ் சினிமா டாப் ஹீரோக்களுக்கு திருப்புமுனை ஏற்படுத்திய படங்களில் நடித்த அதிர்ஷ்டம் மிக்க நாயிகியாக திகழ்ந்து வந்த கிரணுக்கு இன்று பிறந்தநாள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.