விஷாலுடன் காதலா? - அபிநயா விளக்கம்
நடிகை அபிநயா தான் விஷாலை காதலிக்கவில்லை என கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் விஷால். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் எதுவும், பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை. அடுத்ததாக இவர் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் 'லத்தி' படத்தை மிகவும் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இவர் மார்க் ஆண்டனி என்கிற படத்தில் மிகவும் வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.
இந்நிலையில் அபிநயா இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ''நான் மார்க் ஆண்டனி படத்தில் விஷால் மனைவியாக நடித்து வருகிறேன். படப்பிடிப்புக்காக நாங்கள் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியானதை வைத்து நாங்கள் காதலிப்பதாகவும், நிஜத்தில் எங்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது என வதந்திகளை பரப்பி உள்ளனர்.
இது பொய்யான தகவல்" என்றார். இதன் மூலம் விஷால், அபிநயா காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியை காதலித்து வந்தார். ஆனால் இவர்கள் இருவருக்கும் திடீரென்று பிரிந்துவிட்டனர்.
மேலும் ஹைதராபாத்தைச் சேர்ந்த அனிஷா ரெட்டி என்பவரை விஷால் காதலித்ததாக கூறப்பட்டது. இருவருக்கும் பிரமாண்டமான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், திடீரென இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரிந்தனர்.
டாபிக்ஸ்