Aavesham OTT Review: ‘இந்தியாவிலேயே யாரும் அந்த மாதிரி.. இதுக்குதான் இவ்வளவு பில்டப்பா?- ஆவேசம் ஓடிடி விமர்சனம்!
Aavesham OTT Review: “இந்தியா முழுவதும் உள்ள எந்த நடிகரும், ரங்கா அண்ணாவின் கதாபாத்திரத்தை ஃபகத் ஃபாசில் போல, இவ்வளவு கலகலப்பாகவும் ஆற்றலுடனும் சித்தரிக்க முடியாது. இந்தக் கேரக்டர் ஒரு கல்ட் கிளாசிக்” - ரசிகர்!
ஜித்து மாதவன் இயக்கத்தில், நடிகர் ஃபஹத் பாசில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளியான ‘ஆவேசம்’ திரைப்படம் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. கேங்கஸ்டர் கதையை, நகைச்சுவை பாணியில் திரைக்கதையாக விவரித்தது, விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்று நெட்டிசன்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்த நிலையில் ஆவேசம் திரைப்படம் இன்று அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின் படி, தற்போது படம் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் இந்தப்படம் தொடர்பான விமர்சனங்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
ஒரு கேங்க்ஸ்டருக்கு ரீல்ஸ் - கற்பனையே செய்ய முடியவில்லை!
ரசிகர் ஒருவர் தன்னுடைய எக்ஸ் தளத்தில், "இந்தியா முழுவதும் உள்ள எந்த நடிகரும், ரங்கா அண்ணாவின் கதாபாத்திரத்தை ஃபகத் ஃபாசில் போல, இவ்வளவு கலகலப்பாகவும் ஆற்றலுடனும் சித்தரிக்க முடியாது. இந்தக் கேரக்டர் ஒரு கல்ட் கிளாசிக் ஆகும். ” என்று பதிவிட்டு இருக்கிறார்.
'ஃபகத் கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருக்கிறார்’
ஒரு ரசிகர் படத்தில் தனக்குப் பிடித்த காட்சியின் கிளிப்பை பகிர்ந்து, “இசையமைப்பாளர் சுஷினின் பின்னணி இசையும், ஃபகத்தின் நடிப்பும், இதில் மிகவும் நன்றாக இருக்கும். படத்தின் சிறந்த காட்சி இது” என்று பதிவிட்டு இருக்கிறார்.
மற்றொருவர், ரங்காவின் கதாபாத்திரத்திற்கு ஃபகத் தன்னுடைய முழு அர்ப்பணிப்பையும் கொடுத்திருப்பதாக கூறியிருக்கிறார்.
மேலும் அவர், “ ஆவேசம் வேறுமாதிரியான திரைப்படம். ஃபகத் ஃபாசில் ரங்கா கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். அவர் சிறப்பாக நடித்திருக்கிறார். ” என்று பதிவிட்டு இருக்கிறார்.
'டோன்ட் கெட் தி ஹைப் '
இன்னொரு எக்ஸ் வாசி, இந்தப்படத்தை சுற்றி இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியதற்கான காரணத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
நான் திரையரங்கில் படத்தை பார்க்காததாலா என்று தெரியவில்லை. படம் பெரிதாக என்னை கவரவில்லை. ஆனால் பெரிய திரையில் பார்த்தாலும் சரி, சின்னத்திரையில் பார்த்தாலும் சரி, நல்ல படங்கள் வெற்றி பெறும்.
ஒரு ரசிகர், க்ளைமாக்ஸின் முடிவில் ரங்கா உணர்ச்சிவசப்படும் ஒரு காட்சியைப் பகிர்ந்து, “ ரங்கா கேரக்டர் காலம் தாண்டியும் நின்று பேசும். ரங்காவிற்காக படத்தை பார்ப்பவர்களுக்கு படம் நரகமாக தெரியலாம். மற்றவர்களுக்கு, ஆவேசம் திரைப்படம் நல்ல படத்தை பார்த்தது போன்ற அனுபவத்தை வழங்கும். ” என்று பதிவிட்டு இருக்கிறார்.
என்ன மாதிரியான கதை:
ரங்கா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஃபஹத் பாசில் சக நடிகர்களுடன் இணைந்து, கேங்கஸ்டர் காமெடி ஜானரில் வெளுத்து வாங்கி இருக்கிறார்.
இயக்குநர் ஜித்து மாதவனின் முந்தைய படத்தைப் போலவே, ஆவேசம் பெங்களூரில் அமைக்கப்பட்டு கல்லூரி மாணவர்களின் குழுவைச் சுற்றி வருகிறது.
மூன்று புலம் பெயர்ந்த மலையாளி கல்லூரி மாணவர்கள் - பீபி (மிதுன்), அஜு (ஹிப்ஸ்டர்) மற்றும் சாந்தன் (ரோஷன் ஷானவாஸ்) - ராகிங் செய்வதைத் தடுக்க முயற்சி செய்கிறார்கள்.
அந்த முயற்சி தோல்வி அடைகிறது. அது மட்டுமில்லாமல் அவர்கள் கடத்தப்பட்டு தாக்கப்படுகிறார்கள். இதனையடுத்து அவர்கள் பழிவாங்க விரும்புகிறார்கள். அதன் பின்னர் என்ன ஆனது என்பது கதையாக விரிகிறது.
மீண்டும் தன்னுடைய திறமையை நிரூபித்த ஜித்து மாதவன்
கேங்ஸ்டர் நகைச்சுவை காட்சிகள் வாயிலாக மீண்டும் தன்னுடைய திறமையை நிரூபித்து இருக்கிறார் இயக்குநர் ஜித்து மாதவன்
கல்லூரி கதை சினிமாவில் அடிக்கடி பார்க்கப்படும் கதை என்றாலும், அதை ஒரு மாஸ் மசாலா காமிக்காக மாற்றுவதில், ரங்காவின் கதாபாத்திரம் முக்கியமானதாக அமைந்து இருக்கிறது. வசனங்கள் படத்திற்கு நிறைய நகைச்சுவையை சேர்த்து இருக்கின்றன.
அவர் அதிக மாஸ் மசாலா படங்களில் நடிக்கவில்லை. ஃபகத்தின் மற்றொரு பரிணாமம் அனைவருக்கும் பிடித்திருந்தது!
ரங்காவாக ஃபஹத் பாசிலை நடிக்க வைத்தது புத்திசாலித்தனமாக இருந்தது. ஏனெனில் அவர் அதிக மாஸ் மசாலா படங்களில் நடிக்கவில்லை. ஆனால் இந்தப்படத்தில் அவர் சந்தேகத்திற்கு இடமின்றி மாஸ் கிளப்பி இருக்கிறார். படத்தை சிரமமின்றி தனது தோள்களில் சுமக்கிறார்.
எடிட்டிங் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.
அவர் வெளிப்படுத்தும் நடிப்பில், அவரது நகைச்சுவை உணர்வு சரியாக வெளிப்படுகிறது. இசையமைப்பாளர் சுஷின் ஷியாமின் பாடல்கள் மிகவும் இளைஞர்களை ஈர்க்கும் விதமாக அமைந்து இருக்கிறது. எடிட்டிங் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.
முன்னதாக, கடந்த 2016ம் ஆண்டு வெளியான புலி முருகன், 2019ம் ஆண்டு வெளியான லூசிபர், கடந்த ஆண்டு வெளியான 2018, இந்த ஆண்டு வெளியான மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு ஆகிய திரைப்படங்கள் மலையாளத்தில் இருந்து வெளியாகி100 கோடியை தாண்டிய திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்