Jayam Ravi: ‘வாந்திய கையில பிடிச்சார்.. வயித்துல கத்தி வச்ச உடனே மயக்கம் போட்டு விழுந்துட்டார்..’ - ஆர்த்தி எமோஷனல்!-aarthi ravi throwback interview about how jayam ravi support during her pregnancy - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Jayam Ravi: ‘வாந்திய கையில பிடிச்சார்.. வயித்துல கத்தி வச்ச உடனே மயக்கம் போட்டு விழுந்துட்டார்..’ - ஆர்த்தி எமோஷனல்!

Jayam Ravi: ‘வாந்திய கையில பிடிச்சார்.. வயித்துல கத்தி வச்ச உடனே மயக்கம் போட்டு விழுந்துட்டார்..’ - ஆர்த்தி எமோஷனல்!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 10, 2024 07:04 AM IST

Jayam Ravi: அவள் வயிகத்தியை வயிற்றில் மருத்துவர்கள் வைத்தார்கள் அதை பார்த்த உடனேயே நான் மயக்கம் போட்டு விழுந்து விட்டேன். அதன் பிறகு நான் அருகில் சென்று ஏதோ எனக்கு அறுவை சிகிச்சை செய்தது போல உட்கார்ந்து இருந்தேன். - ஜெயம் ரவி!

Jayam Ravi: ‘வாந்திய கையில பிடிச்சார்.. வயித்துல கத்தி வச்ச உடனே மயக்கம் போட்டு விழுந்துட்டார்..’ - ஆர்த்தி எமோஷனல்!
Jayam Ravi: ‘வாந்திய கையில பிடிச்சார்.. வயித்துல கத்தி வச்ச உடனே மயக்கம் போட்டு விழுந்துட்டார்..’ - ஆர்த்தி எமோஷனல்!

என்னுடைய வாந்தியை பிடித்தார்

இது குறித்து அவர் பேசும் போது, “முதல் குழந்தை பிறக்கும் பொழுது ரவி என்னுடன் இருக்க வேண்டும் என்று தான் நினைத்திருந்தார்; ஆனால் எதிர்பாராத விதமாக எனக்கு குழந்தை கொஞ்சம் சீக்கிரமாகவே பிறந்து விட்டது. அந்த சமயத்தில் ரவி எங்கேயும் எப்போதும் படத்திற்காக பாரீஸில் இருந்தார். ஆகையால் முதல் குழந்தை ஆரவ் அப்பா அருகில் இல்லாமல் பிறந்தான்.

ஜெயம் ரவி
ஜெயம் ரவி

நான் கர்ப்பமாக இருந்தபோது என்னை ரவி அருகில் இருந்து அப்படி பார்த்துக் கொண்டார். நான் வாந்தி எடுக்கும் பொழுது அதை கையில் ஏந்தினான். இரவில் நான் எழுந்து இதை ந்சாப்பிட வேண்டும் அதை சாப்பிட வேண்டும் என்று சொல்லும் போது கூட அவர் எழுந்து வருவார். கணவராக அவருக்கு நான் 100 மதிப்பெண்ணுக்கு மேல்தான் கொடுப்பேன்.” என்று பேசினார்.

ஜெயம் ரவி பேசும் போது, “முதல் குழந்தை பிறந்த போது என்னால் அருகில் இருக்க முடியவில்லை. அவளுக்கு பிரசவ வலி வந்தவுடன் எனது அப்பா தான் ஒவ்வொன்றாக எனக்கு போனில் அப்டேட் செய்து கொண்டிருந்தார். நான் பதட்டப்பட்டு கேட்டுக் கொண்டே இருந்தேன். ஒரு கட்டத்தில் குழந்தை பிறந்து விட்டது என்றார்; நான் உடனே குழந்தை எப்படி இருக்கிறது என்று கேட்கவில்லை;ஆர்த்தி எப்படி இருக்கிறாள் என்று தான் கேட்டேன்.

மயக்கம் போட்டு விழுந்து விட்டேன்.

ஆர்த்திக்கு அறுவை சிகிச்சை மூலமாகத்தான் குழந்தை பிறந்தது. இரண்டாவது குழந்தை பிறந்த போது நான் உடன் இருந்தேன். அப்போது ஆபரேஷன் தியேட்டருக்குள் என்னையும் அனுமதித்து இருந்தார்கள். அவள் சுயநினைவை இழந்த உடனே எனக்கு ஒரு மாதிரியாகிவிட்டது.

ஜெயம் ரவி
ஜெயம் ரவி

அதன் பிறகு கத்தியை வயிற்றில் மருத்துவர்கள் வைத்தார்கள் அதை பார்த்த உடனேயே நான் மயக்கம் போட்டு விழுந்து விட்டேன். அதன் பிறகு நான் அருகில் சென்று ஏதோ எனக்கு அறுவை சிகிச்சை செய்தது போல உட்கார்ந்து இருந்தேன். அப்போது என்னுடைய மாமியார் என்னை ஓங்கி அறைந்தார். அதன் பின்னர் அந்த மயக்கத்தில் இருந்து எழுந்து வந்து குழந்தையை பார்த்தேன்.” என்றார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.