Tamil Movies: டாப் ஹீரோக்கள் படங்கள் இல்லை..ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்! இன்றைய நாளில் வெளியான படங்கள் லிஸ்ட் இதோ-aaramanai sattai and more check out the list of tamil movies releases on sep 19 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Movies: டாப் ஹீரோக்கள் படங்கள் இல்லை..ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்! இன்றைய நாளில் வெளியான படங்கள் லிஸ்ட் இதோ

Tamil Movies: டாப் ஹீரோக்கள் படங்கள் இல்லை..ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்! இன்றைய நாளில் வெளியான படங்கள் லிஸ்ட் இதோ

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 19, 2024 07:54 AM IST

Tamil Movies Released on Sep 19: டாப் ஹீரோக்கள் படங்கள் இல்லை என்றாலும், அரண்மனை, சாட்டை என ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டான படங்கள் இன்றைய நாளில் வெளியாகியுள்ளன. இன்று வெளியான படங்களில் ரசிகர்களை கவர்ந்தவற்றின் லிஸ்டை பார்க்கலாம்.

Tamil Movies: டாப் ஹீரோக்கள் படங்கள் இல்லை..ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்! இன்றைய நாளில் வெளியான படங்கள் லிஸ்ட் இதோ
Tamil Movies: டாப் ஹீரோக்கள் படங்கள் இல்லை..ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்! இன்றைய நாளில் வெளியான படங்கள் லிஸ்ட் இதோ

ஆண் பிள்ளை சிங்கம்

சிவக்குமார், ஸ்ரீபிரியா, சுஜாதா, சோ, ஃபடாபட் ஜெயலட்சுமி உள்பட பலர் நடித்திருந்த இந்த படத்தை எஸ்.பி. முத்துராமன் இயக்கியுள்ளார். 1975இல் குடும்ப திரைப்படமாக வெளியாகிய இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

வசந்த கால பறவை

பவித்ரன் இயக்கத்தில் ரமேஷ் அரவிந்த், ஷாலி, சரத்குமார், கவுண்டமணி, வி.கே. ராமசாமி உள்பட பலர் நடித்திருந்த இந்த படம் காதல் கலந்த பேமிலி எண்டர்டெயினராக அமைந்தது. சரத்குமார் ஹீரோவாக ஆவதற்கு முன்பு அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்த படமாக இந்த படம் அமைந்தது. தேவா இசையமைப்பில் செம்பருத்தி செம்பருத்தி என்ற பாடல் சிறந்த மெலடியாக மாறியது. கமர்ஷியல் இயக்குநராக வலம் வந்த பவித்ரன் இயக்கிய முதல் தமிழ் படமாக இருக்கும் வசந்த கால பறவை வெளியாகி இன்றுடன் 33 ஆண்டுகள் ஆகிறது.

ஆஹா என்ன பொருத்தம்

ராம்கி, கவுண்டமணி, சங்கவி, செந்தில் உள்பட பலர் நடித்து காமெடி படமாக ரசிகர்களை கவர்ந்தது ஆஹா என்ன பொருத்தம். சி. ரங்கநாதன் இயக்கிய இந்த படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருப்பார். ஹரிகரன், ஜானகி பாடிய சிந்தாமணி என்ற பாடல் பலரால் விரும்பி கேட்கப்படும் பாடலாக அமைந்தது.

கவுண்டமணியின் காமெடி வெகுவாக ரசிகர்களை கவர்ந்த ஆஹா என்ன பொருத்தம் படம் வெளியாகி 27 ஆண்டுகள் ஆகிறது.

ராமன் தேடிய சீதை

சேரன் கதையின் நாயகனாகவும், விமலா ராமன், ரம்யா நம்பீசன், கஜாலா, நவ்யா நாயர், கார்த்திகா, பசுபதி, நிதின் சத்யா உள்பட பலர் நடித்து காதல் படமாக உருவாகியிருந்த ராமன் தேடிய சீதை படத்தை கே.பி. ஜெகன் இயக்கியிருந்தார்.

டைட்டிலுக்கு ஏற்ப தனது வாழ்க்கை துணையாக சேரன் பெண் தேடும் பயணத்தை எமோஷனலாக சொல்லும் கதையாக படத்தை உருவாக்கியிருப்பார்கள். நேர்மறையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் ரசிகர்களையும் கவர்ந்தது.

வித்யாசாகர் இசையில் மழை நின்ற, இப்பவே இப்பவே, என்ன புள்ள போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட்டானது. பீல் குட் படமாக இருக்கும் ராமன் தேடிய சீதை வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் ஆகிறது.

சாட்டை

சமுத்திரகனி, தம்பி ராமையா முக்கியத்துவமான கதாபாத்திரத்தில் நடிக்க யுவன், மகிமா நம்பியார், ஜூனியர் பாலையா உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படத்தை எம். அறிவழகன் இயக்கியிருந்தார்.

கிராமத்தில் இருக்கும் அரசு பள்ளியையும், மாணவர்களையும் படிப்பு, விளையாட்டு, ஒழுக்கம் என அனைத்திலும் சிறந்தவர்களாக மாற்ற சமுத்திரகனி எடுக்கும் முயற்சிதான் படத்தின் கதை.

காதல், ஆக்சன் என்று இருந்த தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து சாட்டை படம் ஹிட்டானது. டி. இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் வரவேற்பை பெற்றன. தமிழ்நாடு அரசின் விருதை பெற்ற படமான சாட்டை வெளியாகி இன்றுடன் 12 ஆண்டுகள் ஆகிறது

அரண்மனை

அரண்மனை சீரிஸ் படங்களில் முதல் படமாக உருவான அரண்மனை 2014இல் வெளியானது. சுந்தர் சி இயக்கியிருந்த இந்த படத்தில் சுந்தர் சி, வினய் ராய், ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, சந்தானம் உள்பட பலரும் நடித்திருப்பார்கள். திகில் கலந்த காமெடி பாணியில் உருவாகியிருந்த அரண்மனை அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த அரண்மனை படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகிறது. சொல்லப்போனால் அரண்மனை பிரான்சைஸ் தொடங்கி ஒரு தசாப்தம் ஆகியிருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.