தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Aamir Khan: பிகே ரேடியோ நிர்வாண காட்சி… ‘என்ன அப்படி பார்த்த என்ன இப்ப’ - ஓப்பனாக பேசிய அமீர்கான்!

Aamir Khan: பிகே ரேடியோ நிர்வாண காட்சி… ‘என்ன அப்படி பார்த்த என்ன இப்ப’ - ஓப்பனாக பேசிய அமீர்கான்!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 28, 2024 07:36 PM IST

எல்லோரும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். மிகவும் சங்கடமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் நான் செட்டிற்க்குள் வந்த போது, நான் வேலை செய்ய வேண்டும் என்று எண்ணினேன். என்னுடைய ஷாட் எனக்கு குழப்பமாக இருந்தது

Aamir Khan reveals he removed his abdominal guard while filming opening scene in PK
Aamir Khan reveals he removed his abdominal guard while filming opening scene in PK

ட்ரெண்டிங் செய்திகள்

பிகே நிர்வாண காட்சியில் அமீர்கான் 

இது குறித்து நடிகர் அமீர்கான் பேசும்போது, "படப்பிடிப்பு நாளன்று நான் ராஜ்குமார் தந்த ஷார்ட்ஸை அணிந்து, ரேடியோவுடன் வெளியே வந்தேன். படப்பிடிப்பு தளத்தில் போன் வேண்டாம் என்று ராஜூ சொல்லியிருந்தார். அதனால், செட்டில் பணியாற்ற இருந்த அனைவருக்கும், போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருந்தது. 

அந்த காட்சியில் நான் ஓட வேண்டியிருந்தது. நான் நடக்கும் வரை பரவாயில்லை, ஆனால் ஓட வேண்டியிருந்தது. நான் ஓடும்போது, அந்த ஷார்ட்ஸ் எனக்கு சரிவர இல்லை என்பதை உணர்ந்தேன். 

போதாகுறைக்கு, நான் வேகமாக வேறு ஓட வேண்டியிருந்தது. ஆனால், அதை அணிந்து கொண்டு என்னால் ஓட முடியவில்லை. ஓரிரு முயற்சிகளுக்குப் பிறகு நான் ராஜூவிடம், எனக்கு ஷாட் திருப்தியாக வரவேண்டும். ஆகையால் நான் அதனை கழற்றுகிறேன் என்று சொல்லி, எல்லோரையும் கேமராவுக்குப் பின்னால் போகச் சொல்லிவிட்டு ஓடினேன்.” என்று பேசினார். 

அவர் மேலும் பேசுகையில் , "படப்பிடிப்பு தளத்தில் நிர்வாணமாக நடப்பது மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று நான் நினைத்தேன். காரணம், நமக்கு அது பழக்கமில்லை அல்லவா? உண்மையில், நான் அதை எப்படி செய்வது என்று கவலையாக இருந்தேன். 

எல்லோரும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். மிகவும் சங்கடமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் நான் செட்டிற்க்குள் வந்த போது, நான் வேலை செய்ய வேண்டும் என்று எண்ணினேன். என்னுடைய ஷாட் எனக்கு குழப்பமாக இருந்தது. 

அதனால் நான் ராஜுவிடம், 'இதெல்லாம் முக்கியமில்லாத விஷயங்கள். என்னை நிர்வாணமாக பார்த்தால், என்ன பெரியதாக நடந்து விட போகிறது. நமக்கு ஷாட் திருப்தியாக வர வேண்டும் என்றேன். அதன் பின்னர் நான் அசெளகரியமாக உணரவில்லை. ஆனால், நான் அதைச் செய்த போது, அதிர்ச்சியடைந்தேன்.

முன்னதாக, நடிகர் அமீர்கானும், கிரண்ராவும் கடந்த 2005ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இவர்கள் விவாகரத்து செய்து கொண்ட போதும் தங்களது குழந்தைக்கு நல்ல பெற்றோராகவும், நண்பர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் அண்மையில் பங்கேற்றனர். அந்த நிகழ்வில் தங்களுடைய விவாகரத்து குறித்து பேசினர்.

'நான் எதை மேம்படுத்த முடியும்?'

அந்த நிகழ்ச்சியில் பேசிய அமீர்கான், “ நான் உங்களுக்கு ஒரு வேடிக்கையான விஷயத்தை சொல்கிறேன். நாங்கள் அண்மையில் விவாகரத்து செய்து கொண்டது எல்லோருக்கும் தெரியும்.

ஒரு மாலை நேரத்தில் நான் இதனை கிரணிடம் கேட்டேன். அவரிடம் நான், ஒரு கணவனாக நான் எந்த விதத்தில் உனக்கு குறை உள்ளவனாக இருந்தேன். நல்ல கணவனாக மாற நான் என்னென்ன விஷயங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டேன்.” என்றார்.

இதனையடுத்து கிரண் ஒரு பட்டியலுடன் தயாராக இருந்தாள். நான் என்னுடைய குறைகளை பாய்ண்டுகளாக மாற்ற வைக்கப்பட்டேன்.

தொடர்ந்து கிரண், “ நீ அதிகமாக பேசுகிறாய். நீ மற்றவர்களை பேசவே விடமாட்டாய். உன்னுடைய கருத்தையே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருப்பாய்” என்றார். நான் அதற்கு 15 முதல் 20 பாய்ண்டுகளை கொடுத்தேன்.” என்று பேசினார்.

இதற்கு சோசியல் மீடியாவில் சிலர் எதிர்வினையாற்றி இருந்தனர். அதில் ஒருவர் இவ்வளவு முதிர்ச்சி தேவையில்லை என்று கமெண்ட் செய்திருந்தார். இன்னொருவர் அமீர்கான் எவ்வளவு முதிர்ச்சியாகவும், வெளிப்படையாகவும் இருக்கிறார்.” என்று கமெண்ட் செய்திருந்தார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்