Aalavandhan Re- Release: ரெடியா மக்களே…மீண்டும் திரையரங்குகளில் ஆளவந்தான்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Aalavandhan Re- Release: ரெடியா மக்களே…மீண்டும் திரையரங்குகளில் ஆளவந்தான்!

Aalavandhan Re- Release: ரெடியா மக்களே…மீண்டும் திரையரங்குகளில் ஆளவந்தான்!

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 25, 2023 02:29 PM IST

கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் திரைப்படம் மீண்டும் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஆளவந்தான் திரைப்படம்
ஆளவந்தான் திரைப்படம்

இந்திய வரலாற்றிலேயே அதிக அளவு பிரிண்ட் செய்யப்பட்ட திரைப்படமும் இந்த ஆளவந்தான் தான். உள்ளே கடவுள் வெளியே மிருகம் விளங்க முடியாத கவிதை நான் எனக் கமலஹாசனின் நடிப்பு சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. இந்த படத்தில் பல புதுமையான, பல புதிய தொழில்நுட்பங்கள் கமல்ஹாசன் அறிமுகப்படுத்தி இருந்தார்.

தற்போது மீண்டும் இந்த ஆளவந்தான் திரைப்படம் 1000 திரையரங்குகளில் உலகமெங்கும் விரைவில் வெளியாக உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கலைப்புலி எஸ்.தாணு ட்வீட்
கலைப்புலி எஸ்.தாணு ட்வீட்

இப்படம் வெளியான பொழுது பல புதிய தொழில்நுட்பங்களுடன் அனிமேஷன் காட்சிகளுடன் வெளியானது. தற்போது புதிய டிஜிட்டல் ஒலி அமைப்பின் வெளியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் வெளியான போது பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தைக் கொண்டாட ஆரம்பித்தனர். இதயம் பேசுகிறது என்ற இதழில் 1983 ஆம் ஆண்டு தாயம் என்ற பெயரில் தொடராக வெளிவந்த கதை தான் இந்த ஆளவந்தான்.

இந்த கதையை முதலில் இயக்குநர் இமயம் கே பாலச்சந்தர் இயக்க வேண்டும் என்று கதை எழுதினார். பின்னர் இந்த கதையை இயக்குவதற்குத் தனது சிஷ்யன் சுரேஷ் கிருஷ்ணாவிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

இரட்டை வேடத்தில் கமல்ஹாசன் நடித்து அசத்தியிருப்பார். மனநோயில் சிக்கிக் கொள்ளும் நந்துவின் கதாபாத்திரத்திற்காகத் தலையை மொட்டை அடித்து உடல் எடையை அதிகரித்து வலது கண் சிறியதாக்கி படத்திற்காகத் தன்னை செதுக்கிக் கொண்டார் கமல்ஹாசன்.

தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் இந்த ஆளவந்தான் திரைப்படம் வெளியானது. இதில் மேலும் சிறப்பு என்னவென்றால் ஆசியக் கண்டத்திலேயே முதல் முறையாக மோஷன் கிராபிக்ஸ் கேமரா இந்த ஆளவந்தான் திரைப்படத்தில் தான் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.