12 Years of Mayakkam Enna:இவ்வுலகம் மயக்கம் என்ன யாமினி போன்றோரால் தான் புனிதம் பெறுகிறது!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  12 Years Of Mayakkam Enna:இவ்வுலகம் மயக்கம் என்ன யாமினி போன்றோரால் தான் புனிதம் பெறுகிறது!

12 Years of Mayakkam Enna:இவ்வுலகம் மயக்கம் என்ன யாமினி போன்றோரால் தான் புனிதம் பெறுகிறது!

Marimuthu M HT Tamil
Nov 25, 2023 05:42 AM IST

மயக்கம் என்ன திரைப்படம் வெளியாகி 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

மயக்கம் என்ன திரைப்படம் வெளியாகி 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
மயக்கம் என்ன திரைப்படம் வெளியாகி 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

படத்தின் கதை: கார்த்திக் சுவாமிநாதன் என்னும் இளைஞர் புகைப்படக் கலையின் மீது ஆர்வம் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் தாம் பெரிதாக நேசித்த புகைப்படக் கலைஞரிடம் இருந்து தன்னுடைய புகைப்படம் திருடப்பட்டு, அதற்குண்டான அங்கீகாரம் கிடைக்காததால் மனநலம் பாதிக்கப்படுகிறார். அதன்பின் கார்த்திக்குக்கு எல்லாமுமாக இருந்து குழந்தைபோல் பார்த்துக்கொள்வார், காதல் மனைவி யாமினி. இறுதியாக தான் யாரால் ஒதுக்கப்பட்டாரோ அவர் முன், சிறந்த வனவிலங்கு புகைப்படக்கலைஞர் என்னும் சர்வதேச விருதை வெல்கிறார், கார்த்திக் சுவாமிநாதன். இதற்கு எல்லாமுமாக இருந்த மனைவி யாமினியின் படத்தை சர்வதேச விருது பெறும் மேடையில் எடுத்துக்காட்டி நன்றி நவிழ்கிறார், கார்த்திக் சுவாமிநாதன். அதை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருக்கும் யாமினிக்கு கண்ணீர் முட்டுகிறது. பின் கார்த்திக்கிடம் இருந்து வரும் போனை எடுக்கையில் படம் முடிகிறது.

படத்தில் நான் ரசித்த காட்சிகள்: 

  • ஃப்ரீலான்ஸ் புகைப்படக் கலைஞராக இருக்கும் கார்த்திக் சுவாமிநாதன்(தனுஷ்), ஒரு பாட்டியினை புகைப்படம் எடுத்து அவரிடம் காட்டுவார். தான் இதுவரை தன்னை இவ்வளவு அழகாக பார்த்ததில்லை என்னும் அந்த பாட்டி, தனது கணவரிடம் அழைத்து அதனைக் காட்டுவார். அதைப் பார்த்த பாட்டியின் கணவரான தாத்தா, இதில் இருந்து ஒரு காபி கிடைக்குமா என கெஞ்சுவார். கார்த்திக்கின் புகைப்படத்திறமையை மெச்சுவதற்கு முதல் சரியான காட்சி அது.
  • ஒரு மழையில் ரிப்பேர் ஆகி நிற்கும் காரின் முன்பு யாமினி(ரிச்சா கங்கோபாத்யாய்) இரவில் நின்றிருப்பாள். அதைப்பார்த்து கார்த்திக் உதவ முயற்சிப்பார். ஒருகட்டத்தில் கார்த்திக் குடித்திருப்பதை அறிந்து ஏன் குடித்தாய் என கேட்பார் யாமினி. தனது புகைப்படத்தை ’ஆயி’ புகைப்படம் என சொல்லிவிட்டனர் எனச் சொல்லி கார்த்திக் அழுவார். உடனே அருகில் வந்து ஆரத்தழுவும் யாமினி, நல்ல வாய்ப்பு மீண்டும் வரும் என்றும்; உன்னைப்போல் எத்தனைபேர் ஈடுபாட்டுடன் தங்களது பணியை செய்கின்றனர் எனக் கேட்பார். 
  • யாமினிக்கும் கார்த்திக்குக்கும் இடையில் திருமணம் நடைபெற்றுமுடிந்தபின், தான் உதவியாளராக வாய்ப்புக்கேட்டு சென்ற இடத்தில், தனது புகைப்பட திறமையைக் காட்ட சில புகைப்படங்களை மாதேஷ் என்னும் ஜாம்பவான் இடத்தில் கொடுத்துவிட்டு வருவார், கார்த்திக் சுவாமிநாதன். ஆனால்,  மாதேஷோ அதை தான் எடுத்த புகைப்படங்கள் எனக்கூறி விருதுபெறுவார். அதை டிவியில் பார்த்தவுடன் டிவியைப் போட்டு உடைப்பார், கார்த்திக். மனைவி யாமினியைத் தள்ளுவார். அதில் யாமினிக்குக் கருச்சிதைவு நடைபெற்றுவிடும். அப்போதும் அழுகையின்மூலம் திட்டிதீர்ப்பார், யாமினி. அக்காட்சி பலரை கலங்கச் செய்துவிடும். 
  • பின், கார்த்தியின் இல்லாத வறியநிலையைக் காட்டி யாமினியை தனது திருமணத்தைத் தாண்டிய உறவில் வீழ்த்த நினைக்கும் நண்பரிடம் காரில் அமர்ந்துகொண்டே ’கார்த்தி என் புருஷன்’ என தெனவெட்டாகச் சொல்லும் இடத்தில் யாமினியை அழகாக காட்சிப்படுத்தியிருப்பார், இயக்குநர் செல்வராகவன்
  • கருச்சிதைவுக்குப் பின் கணவர் கார்த்திக்குடன் பேசுவதைக் குறைத்துக்கொள்ளும் யாமினி, கணவரின் புகைப்படங்களை பல்வேறு பத்திரிகை நிறுவனங்களுக்கு அனுப்புவதை மட்டும் கைவிடவில்லை. ஒருகட்டத்தில் கார்த்திக்கின் படம் ஒரு பிரபலப் பத்திரிகையில் அட்டைப்படமாக வருகிறது. அதன்பின் பல்வேறு பிரபலமான டிவி, பத்திரிகையில் கார்த்திக்குக்கு வாய்ப்புகிடைக்கிறது. நன்கு பணியாற்றுகிறார். இறுதியில் சர்வதேச விருதுக்குத் தேர்வாகிறார். அங்கு விருதுபெறுகையில் தனது பர்ஸில் இருக்கும் மனைவி யாமினியின் புகைப்படத்தை எடுத்து சபையினருக்குக் காட்டுகிறார். பின், விழாமேடையில் இருந்து இறங்கியதும் மனைவி யாமினிக்கு போன் அடிக்கிறார். வெகுநாட்கள் கழித்து பேசுகிறார், யாமினி. அவ்வளவு அழகியலான காட்சி அது!
  • மொத்தத்தில் இந்த உலகம் ஆண்களின் அத்தனை பிழைகளையும் சகித்துக்கொண்டு அவனை சமூகத்தில் ஒரு மனிதனாக சாதனையாளனாக மாற்றும் யாமினிக்களால் தான் புனிதம் பெறுகிறது. காலம்கடந்து நிற்கும் காவியத்தைப் படைத்த செல்வராகவனுக்கு வாழ்த்துகள். மயக்கம் என்ன படத்தை இன்னும் கொண்டாடலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.