Yogi Babu: பணத்தை தராம இழுத்தடிக்கிறார்.. யோகிபாபு மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த தயாரிப்பாளர்! - நடந்தது என்ன?
யோகிபாபு மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.
காமெடி நடிகர் யோகிபாபுவிற்கு அறிமுகம் தேவையில்லை. முன்னணி நடிகர்களின் படங்கள் என்றாலே அங்கு யோகி பாபுவின் காமெடிக்கு தனி இடம் உண்டு. இதைத்தவிர்த்து கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக இவர் கதாநாயகனாக நடித்து வெளியான ‘மண்டேலா’ திரைப்படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்தப் படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வினுக்கு தேசிய விருதும் கிடைத்தது. அண்மையில் வெளியாகி வரவேர்பை பெற்ற ஜெயிலர் திரைப்படத்திலும் அவரது நடிப்பு பாராட்டைப் பெற்றது. அடுத்தாகவும் கை வசமும் எக்கச்சக்க படங்கள் இருக்கின்றன. இந்த நிலையில் அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை விருகம்பாக்கத்தில் ROOBY ஃபிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருபவர் டேனியல். இந்த பேனரின் கீழ் படம் ஒன்றை தயாரிக்க முடிவு செய்த இவர் டேனியல் அதில் யோகிபாபுவை நடிப்பதற்கு கேட்டு அதற்காக 60 லட்சம் ரூபாய் சம்பளம் பேசி, இந்த பேச்சு வார்த்தையில் 20 லட்ச ரூபாய்க்கான காசோலையையும் முன் பணமாக கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் படப்பிடிப்பு தொடங்கியதும் படத்தில் நடிக்க யோகிபாபுவை தயாரிப்பு நிறுவனம் அழைத்ததாகவும், ஆனாக் யோகிபாபு வரமால் ஏமாற்றி வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் வேதனையடைந்த ஹாசிர் பணத்தை திருப்பிக்கேட்டு இருக்கிறார். ஆனால் பணத்தையும் திருப்பித் தராமல் இழுத்தடித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஹாசிர் யோகிபாபு மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதற்கு யோகிபாபு தரப்பில் இருந்து அந்தத்தகவல் முற்றிலும் தவறானது என்று விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
டாபிக்ஸ்