TTF Vasan: டிடிஎஃப் வாசன் கார் மோதி பைக்கில் சென்றவர் காயம்! - போலீசார் வழக்குப்பதிவு! - நடந்தது என்ன? - வீடியோ உள்ளே!
டிடிஎஃப் வாசன் சென்ற கார் மோதி பைக்கில் சென்றவருக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது.
அதிவேகமாக பைக்குகளில் ட்ராவல் செய்து அதனை வீடியோக்களாக மாற்றி ட்வின் த்ரோட்லர்ஸ் எனும் தன்னுடைய யூடியூப்பில் பதிவிட்டு பிரபலமானவர் கோவையைச் சேர்ந்த டிடிஎஃப் வாசன். இவருக்கு யூடியூப்பில் 20 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் தன்னுடைய பிறந்தநாளை கோவை தனியார் விடுதியில் ஒன்றில் தனது ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் கொண்டாடினார். அவருக்கு கூடிய கூட்டத்தை கண்டு பொதுமக்கள் மிரண்டனர். இதையடுத்து, இணையத்தில் டிடிஎஃப் வாசன் மீது விமர்சனம் எழுந்தது.
இந்த சம்பவத்திற்கு பின்னர்தான் டிடிஎஃப் வாசன் மீடியா வெளிச்சத்திற்கு வந்தார். அதன் பின்னர் அனுமதிக்கப்பட்ட அளவை விட சாலையில் அதிவேகமாக பைக்கை ஓட்டுதல், ஜிபி முத்துவை பைக்கில் உட்காரவைத்து 150 கிமீ வேகத்தில் சென்றது உள்ளிட்ட பல்வேறு புகார்களில் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர் கொடுத்த நேர்காணல்களும் காவல்துறைக்கு எதிராக சவால் விடும் படி பேசிய பேச்சுக்கள் தொடர்பான வீடியோக்களும் பரபரப்பை கிளப்பியது.
ஆனால் அதற்கெல்லாம் துளியும் அசராத டிடிஎஃப் தன் போக்கில் வழக்கம் போல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் டிடிஎஃப் வாசன் சென்னை அமைந்தகரை அருகே சென்று கொண்டிருந்த பயணி மீது தன்னுடைய காரை மோதி விபத்தை ஏற்படுத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த விபத்தில் இருசக்கர வாகனிக்கு காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து டிடிஎஃப் வாசன் அங்கிருந்த ஆட்டோ ரிக்ஷா அருகே தன்னுடைய காரை நிறுத்திவிட்டு சென்று இருக்கிறார். இது தொடர்பாக டிடிஎஃப் வாசன் மீது அண்ணாநகர் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து இருக்கின்றனர்.
முன்னதாக, பல்வேறு சர்ச்சைகளால்பிரபலமான டிடிஎஃப் வாசனுக்கு சினிமா வாய்ப்பு கதவைத் தட்டியது. அந்த வகையில் டிடிஎஃப் வாசன் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அவரது பிறந்தநாளான வருகிற ஜூன் மாதம் 29 ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கடந்த 29ம் தேதி அந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அந்தப்படத்தின் மஞ்சள் வீரன் என பெயர் வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்