தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  800 Trailer: பிரபாகரன் சந்திப்பு.. ஈழப்போர்.. “நான் தமிழன் மட்டுமல்ல”.. முத்தையா பயோபிக் ‘800’ ட்ரெய்லர் இங்கே!

800 trailer: பிரபாகரன் சந்திப்பு.. ஈழப்போர்.. “நான் தமிழன் மட்டுமல்ல”.. முத்தையா பயோபிக் ‘800’ ட்ரெய்லர் இங்கே!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 05, 2023 06:11 PM IST

பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறாக உருவாகி இருக்கும் 800 திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.

 800 ட்ரெய்லர்
800 ட்ரெய்லர்

 

இலங்கை கிரிக்கெட் அணியில் பயணித்து தன்னுடைய சுழற்பந்து வீச்சால் பல விக்கெட்டுகளை வீழ்த்தி பின்னாளில் மாபெரும் சாதனையாளராக மாறிவர் முத்தையா முரளிதரன். இவரின் வாழ்க்கை வரலாறை படமாக்க முடிவு செய்யப்பட்ட நிலையில் முதற்கட்டமாக இந்தப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார். 

ஆனால் ஈழப்போரில் சிங்களர்களுக்கு ஆதரவாக முத்தையா குரல் கொடுத்ததை காரணம் காட்டி அவர் படத்தில் விஜய்சேதுபதி நடிக்கக்கூடாது என்று பல தரப்பிலும் இருந்து எதிர்ப்பு குரல்கள் வந்தன.

 

ட்ரெண்டிங் செய்திகள்

ஆனால் விஜய்சேதுபதி நடிப்பதில் உறுதியாக இருந்தார். ஆனால் காலப்போக்கில் விமர்சனங்கள் சர்ச்சையாக உருவெடுக்க தானாகவே முன் வந்து முத்தையா அறிக்கை வெளியிட, விஜய்சேதுபதி அந்தப்படத்தில் இருந்து விலகினார். 

இந்த நிலையில் அவருக்கு பதிலாக 'ஸ்லம்டாக் மில்லியனர்' நடிகர் மதுர் மிட்டல் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தப்படத்தின் கதையை புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக மற்றும் ஸ்ரீபதி ஆகியோர் இணைந்து எழுதி இருக்கின்றனர்.

ஸ்ரீபதி இயக்கி இருக்கும் இந்தப்படத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார். 800 என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கும் இந்தப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது. 

வறுமையின் பிடியில் இருந்து கிரிக்கெட் உலகத்திற்குள் வந்தது, ஈழப்போரில் எதிர்கொண்ட பிரச்சினைகள், கிரிக்கெட் உலகின் சூழ்ச்சி என முத்தையா முரளிதரன் தன்னுடைய வாழ்க்கையில் எதிர்கொண்ட பல விதமான சம்பவங்களை உள்ளடக்கியதாக ட்ரெய்லர் விரிகிறது. இறுதியாக “நான் தமிழன் மட்டுமல்ல, கிரிக்கெட்டர்” என்று சொல்லும் வசனம் ஈர்ப்புடையதாக இருக்கிறது.