Leo: ஜெயிலருக்கு போட்டியாக லியோ.. நாட்களை சொல்லி விளையாட்டு.. குஷியில் ரசிகர்கள்!
லியோ திரைப்படம் தொடர்பாக ஜாலியாக பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது அந்தப்படத்தின் தயாரிப்பு நிறுவனம்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து இருக்கும் திரைப்படம், லியோ. இந்த திரைப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு தற்போது சமீபத்தில் நிறைவடைந்தது. இருப்பினும் மீண்டும் பறந்த படக்குழு அங்கும் இன்னும் சில காட்சிகளை எடுத்து இருக்கின்றனர்.
அண்மையில் சஞ்சய் தத்தின் பிறந்தநாளன்று வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்தத்திரைப்படம் குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் அந்தப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கீரின் ஸ்டியோஸ், “ அதுதான் கணக்கு புரிதா உனக்கு” என்று பதிவிட்டு லியோ திரைப்படம் வெளியாக இன்னும் 67 நாட்களே இருக்கிறது என்று பதிவிட்டு இருக்கிறது. இந்தப்பதிவை பார்த்த ட்விட்டர் வாசிகள் ஆம் என்று ஆமோதிக்கும் வகையில் விஜயின் புகைப்படங்களை பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர்.
இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய், திரிஷா, சஞ்ஜய் தத், பிரியா ஆனந்த், கௌதம்மேனன், அர்ஜுன், மைசூர் அலிகான், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதிக பொருட்செலவில் இருக்கக்கூடிய இந்த திரைப்படத்தை லலித் தயாரித்து வருகிறார்.
சமீபத்தில் வெளியான, நாரெடி தான் வரவா என்று விஜய் பாடி, நடனமாடிய பாடல் இன்று வரை சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்று வருகிறது.
இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது. செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமும், சாட்டிலைட் உரிமத்தை சன் டிவியும் பெற்று உள்ளது. இந்தத்திரைப்படம் 2 பாகங்களாக வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
டாபிக்ஸ்