Movies: 66 தோல்வி படங்கள்.. கோலிவுட்டை ஏமாற்றிய படங்கள்.. கை கொடுத்து உதவிய மலையாள மூவிஸ்!
ஜனவரி முதல் மார்ச் வரை 68 தமிழ்த் திரைப்படங்கள் திரையரங்குகளில் வந்தன. ஆனால் இதில் தனுஷின் 'கேப்டன் மில்லர்' மட்டுமே 100 கோடி ரூபாய்யை எட்டியது.

மலையாளப் படங்கள் ரூ.100 கோடியைத் தாண்டி தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று வரும் நிலையில், கோலிவுட் படங்கள் திரையரங்குகளில் ஒன்றன் பின் ஒன்றாக தோல்வியடைந்து வருகின்றன. ஜனவரி முதல் மார்ச் வரை 68 தமிழ்த் திரைப்படங்கள் திரையரங்குகளில் வந்தன. ஆனால் இதில் தனுஷின் 'கேப்டன் மில்லர்' மட்டுமே 100 கோடி ரூபாய்யை எட்டியது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்து உள்ள ' லால் சலாம் ' திரைப்படம் வெளியானது. ஆனால் இந்த படம் ரஜினியின் கேரியரில் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. 90 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 36 .1 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்தது.
அதிக வசூல்
இந்த ஆண்டு தமிழில் அதிக வசூல் செய்த படம் கேப்டன் மில்லர். கேப்டன் மில்லர் பாக்ஸ் ஆபிஸில் ரூ.104.79 கோடி வசூல் செய்தது. சிவகார்த்திகேயனின் 'அயலான்' 100 கோடி ருபாய் கிளப்பில் சேரவில்லை என்றாலும், தமிழில் அதிக வசூல் செய்த படங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
