Bahubali: எத்தனை ஆண்டுகளானாலும் நினைவில் நிற்கும் காதல், வீரம், கருணை, பிரமாண்டம்! வசூலிலும் சாதனை! பலே பலே பலே பாகுபலி
1,500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல், பாகுபலி - 2 (தி கன்குலுஷன்) மறக்கமுடியுமா தேவசேனை பாகுபலியின் காதல், வீரம், கருணை அவர்களுக்கு நடந்த துரோகம், போராட்டம். அனைத்தும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நம் கண்முன் இன்று நடந்நதுபோல் காட்டிய ராஜமௌலியின் பிரமாண்டம். அந்தப்படம் குறித்து ஒரு ரீகேப்.
பாகுபலி தி கன்குலுஷன் என்ற பாகுபலி 2ம் பாகம் வந்து 6 ஆண்டுகள் ஆகிறது. பாகுபலியின் பிரமாண்டம் இன்றளவும் நாம் வியந்து பேசிக்கொண்டிருக்கும் விஷயமாகும். தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பான் இந்தியா படமாக வெளியான படம்தான் பாகுபலி. இந்தப்படம் வெளியாவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியான பாகுபலி 1ம் பாகத்தில் கட்டப்பா என்ற ராஜ குடும்பத்தின் விசுவாசியை கொன்றது யார் என்ற கேள்வியுடன் படம் முடிந்திருக்கும்.
அதற்கான விடையாக பாகுபலி - 2 தி கன்குலுஷன் வெளியாகியது. தேவசேனையாக அழுக்குப்புடவையுடன் நடித்திருந்த அனுஷ்கா வீரத்தில் சிறந்த இளவரசியாகவும், பாகுபலியின் காதலியாகவும் நடிப்பில் பின்னியிருப்பார்.
பாகுபலி கதைக்களம், பிங்கள தேவனுக்கும், சிவகாமிக்கும் பிறந்த குழந்தை பல்வாள் தேவன். பிங்கள தேவனின் சகோதரன் மகன் பாகுபலி. ஆனால், பிறந்தபோதே அன்னையையும், தந்தையையும் இழந்த பாகுபலிக்கு, அதே நேரத்தில் குழந்தை பெற்றிருக்கும் சிவகாமியே இரு குழந்தைகளுக்கும் பாலூட்டி வளர்ப்பார். பல்வாள் தேவன் குழந்தை முதலே குரூர புத்திகளுடன் அவனது தந்தையால் வளர்க்கப்படுவான்.
பாகுபலியோ பரந்த மனத்துடன் வளர்வான். தனது மகனைத்தான் ராஜாவாக்க வேண்டும் என்று பல்வேறு ராஜதந்திரங்களை கையாள்வார் நாசர். சிவகாமியோ இருவரையும் ஒரே மாதிரி பாவித்து வளர்ப்பார். யார் அனைத்திலும் சிறந்து விளங்குகிறார்களோ அவர்களே ராஜாவாக அறிவிக்க வேண்டும் என்பது சிவகாமியின் எண்ணமாக இருக்கும். ஆனால் மக்களின் தேர்வோ பாகுபலியாக இருக்கும். பாகுபலியாக பிரபாஸ், பல்வாள் தேவனாக ராணா நடித்திருப்பர். சேவசேனையை காதலிப்பதிலும் இரண்டு பேருக்கும் போட்டி நிலவும்.
அனைத்திலும் தோற்ற பல்வாள்தேவன், பாகுபலியை கொலை செய்யவேண்டும் என வெறிகொண்டு திரிவான். அவர்களின் தளபதி கட்டப்பாவாக சத்யராஜ், அன்னை சிவகாமியாக ரம்யா கிருஷ்ணன் என நட்சத்திரப்பட்டாளமும், பிராமாண்டமும் படத்தை சினிமா எனும் கலை உள்ள வரை பேச வைத்திருக்கும்.
பாகுபலிக்கு நடந்தது என்ன? பாகுபலி வென்றானா? தோற்றானா எனபதே படத்தின் கதை. கதையைவிட பிரமாண்டம், நடிப்பு என அனைத்தும் பாகுபலியை இன்னும் பல ஆண்டுகள் பேசவைக்கும்.
இந்தப்படத்திற்கு இசையை அண்மையில் ஆஸ்கர் விருது வாங்கிய கீரவாணி அமைத்திருப்பார். ஒளிப்பதிவு கே.கே.செந்தில், இந்தப்படத்தின் முதல் பாகம் ரூ. 180 கோடிக்கு எடுக்கப்பட்டு, ரூ.650 கோடி வருவாயை ஈட்டியது. பாகுபலி - 2 தி கன்குலுசன் இரண்டாம் பாகம் ரூ.250 கோடிக்கு எடுக்கப்பட்டு, ரூ.1,810 கோடி வருவாயை குவித்தது. தெலுங்கில் உருவாக்கப்பட்ட படம், தமிழிலும் ஒரிஜினில் வர்சனாகவே வெளிவந்தது.
இந்தியிலும், மலையாளத்திலும் டப்பிங்காக திரைக்கு வந்தது. இந்தியா முழுவதும் ரசிகர்களை கவர்ந்தது. குறிப்பாக பாகுபலியாக நடித்த தெலுங்கு நடிகர் பிரபாஸ்க்கு தெலுங்கு திரையுலகம் கடந்தும் ரசிகர் பட்டாளத்தை அதிலும் குறிப்பிட்டு கூறும்படியாக ரசிகைகளை உருவாக்கியது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
டாபிக்ஸ்