55 Years of Thillana Mohanambal : இசை - நடனம் போட்டி! திரையரங்கில் 175 நாள்! 2 தேசிய விருது! தில்லானா மோகனாம்பாள்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  55 Years Of Thillana Mohanambal : இசை - நடனம் போட்டி! திரையரங்கில் 175 நாள்! 2 தேசிய விருது! தில்லானா மோகனாம்பாள்!

55 Years of Thillana Mohanambal : இசை - நடனம் போட்டி! திரையரங்கில் 175 நாள்! 2 தேசிய விருது! தில்லானா மோகனாம்பாள்!

Priyadarshini R HT Tamil
Jul 27, 2023 05:15 AM IST

55 Years of Thillana Mohanambal : தஞ்சை இசை மற்றும் நடனத்தை படம் பிரதிபலித்தது. அந்த காலத்தின் அங்கிருந்த சமூக கலாச்சார சூழலையும் காட்டியது. இந்தப்படம் வணிக ரீதியாகவும் வெற்றிபெற்றது. தியேட்டர்களில் 175 நாட்களுக்கும் மேல் ஓடியது. சிறந்த திரைப்படம் மற்றும் ஒளிப்பதிவுக்காக இரண்டு தேசிய விருது பெற்றது.

தில்லானா மோகனாம்பாள் பட போஸ்டர்
தில்லானா மோகனாம்பாள் பட போஸ்டர்

படத்தில் முக்கிய கதாபாத்தித்தில் சிவாஜி, பத்மின் தவிர டி.எஸ்.பாலையா, ஏ.வி.எம்.ராஜன், நாகேஷ், மனோரமா உள்ளிட்டோர் நடித்திருப்பார்கள். சண்முகசுந்தரம் என்ற நாதஸ்வர கலைஞர், மோனாம்பாள் என்ற பரத கலைஞரை காதலிப்பது தொடர்பான கதை. ஆனால் இருவருக்குள்ளும் இருக்கும் ஈகோ அவர்களின் காதலை வெளிப்படுத்தவிடாமல் தடுக்கும்.

ரயிலில் பாலையாவின் காமெடி, படத்தில் நாகேஷின் காமெடி என படம் இன்றும் ரசிகர் நினைத்து பாரக்கும் காட்சிகளைக் கொண்டிருக்கும். இறுதியில் அவர் காதலில் ஜெயித்தார்கள் என்பதுதான் மீதி கதையே. மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன என்ற பாடலையெல்லாம் நாம் எவ்வளவு காலம் கடந்தாலும் மறக்க முடியாது.

இந்தப்படம் கோத்தமங்கலம் சுப்புவின் கதையை நாவலை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். அந்த நாவல் ஆனந்த விகடன் பத்திரிக்கையில் தொடராகவும் வந்தது. இந்தப்படத்தின் காட்சிகள் பெரும்பாலும் திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மதுரையில் படமாக்கப்பட்டது. கே.வி.மகாதேவனின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் என்றாலும், மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன? பாடலும், நலந்தானா பாடலும் என்றும் நினைவில் நிற்பவை மட்டுமல்ல இன்று கேட்டாலும் இனிப்பவை.

தஞ்சை இசை மற்றும் நடனத்தை படம் பிரதிபலித்தது. அந்த காலத்தின் அங்கிருந்த சமூக கலாச்சார சூழலையும் படம் காட்டியது. இந்தப்படம் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. தியேட்டர்களில் 175 நாட்களுக்கும் மேல் ஓடியது. சிறந்த திரைப்படம் மற்றும் ஒளிப்பதிவுக்காக இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றது. 

5 மாநில விருகளையும் பெற்றது. இசை, கலை, நடனம் ஆகியவற்றை மையப்படுத்தி பிற்காலத்தில் வந்த பல படங்களுக்கு இந்தப்படம் முன்னோடியாக அமைந்தது.

மனோரமாவுக்கு இந்தப்படத்தில் ஒரு சிறிய ரோல்தான் ஆனாலும் சிறப்பான ரோலாக அது அமைந்திருக்கும். ஆனால் மனோரமா ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருப்பார், சிவாஜி முன் நடிப்பதில் அவருக்கு தயக்கம் இருந்ததாம். ஆனால் இயக்குனர் நடித்தே தீர வேண்டும் என்று கூறியதால் அச்சமின்றி நடித்து அப்ளாசும் அள்ளினார். ஒட்டுமொத்தமாக படமே இன்றும் நினைவில் கொள்ளும் வகையில் அமைந்த ஒன்றுதான்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.