43 Years of Murattu Kaalai: 'அடக்கி ஆளுது முரட்டுக்காளை' ஆண்டுகள் கடந்தும் கெத்துக்காட்டும் காளையன்!
Rajini: ரஜினியின் கேரியரில் மிக முக்கியமான படமாக முரட்டு காளையும் மிக மூர்க்கத்தனமாக அமைந்து விட்டது என்று சொல்லலாம்.
ஏவிஎம், ரஜினி, எஸ்பி.முத்துராமன், பஞ்சு அருணாசலம் , இளையராஜா காம்போவில் 43 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி 1980 டிசம்பர் 20ல் வெளியான படம் முரட்டுககாளை. 43 ஆண்டுகள் தாண்டியும் இன்றும் பயணிக்கும் முரட்டு காளை திரைப்படம் குறித்த தகவல்களை பார்க்கலாம்.
அடக்கி ஆளுது முரட்டுக்காளை' ஆண்டுகள் கடந்தும் கெத்துக்காட்டும் காளையன் என்றே இதை ரஜினியின் கேரியரில் இந்த படம் அமைந்து விட்டது.
நான்கு தம்பி களுடன் வாழும் காளையன் என்ற இளைஞனாக ரஜினி, சமமான கதாபாத்திரத்தில் வில்லனாக பக்கத்தில் உள்ள கிராமத்தில் உள்ள பண்ணையாராக ஜெய்சங்கர், இவர்களோடு ரதி நாயகியாகவும் ஒய்.ஜி. மகேந்திரன், சுமலதா,சுருளிராஜன் ஆகியோர் குணச்சித்திர நடிகர்களாக படம் முழுக்க வாழ்ந்திருப்பார்கள்.
தமிழ் சினிமாவின் பெரும்பாலும் எடுக்கப்பட்ட வழக்கமான பழிவாங்கும் கதைதான் என்றாலும் கூட திரைக்கதையை பஞ்சு அருணாசலம் சாமர்த்தியமாக நகர்த்தி இருப்பார். படத்தில் வில்லனின் காரியதரிசியாக சாமிபிள்ளை என்ற பாத்திரத்தில் வரும் சுருளிராஜன் தனது குடும்பத்தினர் மகிழ்ச்சியோடு வாழ்ந்த வீட்டை இப்போதைய பண்ணையார் ஜெய்சங்கரின் அப்பா அபகரிக்க நினைத்து முடியாமல் போன ஆத்திரத்தில் ஒரு இரவில் வீட்டுக்கு தீ வைத்து அனைவரையும் கொன்று விடுகிறார். அந்த தீ விபத்தில் தப்பித்த சிறுவன் சாமி பிள்ளை தனது குடும்பத்தை அழித்த பண்ணையார் குடும்ப உறவுகளை பழி வாங்கும் முடிச்சு தான் கதையின் கரு.
ஆனால் அந்த சாமிபிள்ளை இந்த கதையில் காமெடியன். உடல் அளவிலும், வசதியும் இல்லாமல் இருக்கும் சாமிபிள்ளை தனது பழிவாங்கலை நடத்த வில்லனுக்கும் கதாநாயகனுக்கும் இடையே கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் முட்டலும் மோதலுமாய் நகர்த்தி பரபரப்பாக மிகுந்த உற்சாக திருப்பங்களோடு பஞ்சு அருணாசலம் திரைக்கதை அமைத்திருப்பார்.
மஞ்சு விரட்டில் காளைகளை அடக்கி ஆளும் இளைஞனாக ரஜினியின் அறிமுகப் பாடலான அண்ணனுக்கு ஜே.. காளையனுக்கு ஜே என்ற பாடலில் இளையராஜா தாரை தப்பட்டை, உறுமி,பெண்களின் குலவைசத்தம் என்று கலந்து கொடுத்த பாடலை இன்றளவும் கிராம பொங்கல் விழாக்களில் தவிர்க்க முடியாத பாடலாக கேட்க முடிகிறது.
அதேபோல் பாபுவின் ஒளிப்பதிவில் ஜூடோ.ரத்னம் அமைத்த ரயில் சண்டை ஆக்சனின் உச்சம்... ரஜினி வழக்கம் போல் தனது தனித்துவமான மேனரிசத்தில் புது உத்தியாக பல காட்சிகளில் சீவிடுவேன் என்ற அர்த்தத்தில் ஒரு கையை உசத்தி எஸ் என்ற எழுத்தை காற்றில் எழுதி காட்டும் போது திரையரங்கில் ஆரவாரம் தொற்றி கொள்ளும். ஏ,பி,சி என்று சொல்லப்படும் அனைத்து சென்டர்களிலும் பெரிய வசூல் வேட்டை நடத்திய இந்த படம்தான் ரஜினியின் திரைப்பட வாழ்வை முழுமையாக மசாலா பாதையில் திருப்பிய படமாக அமைந்தது.
ரஜினியின் கேரியரில் மிக முக்கியமான படமாக முரட்டு காளையும் மூர்க்கத்தனமாக அமைந்து விட்டது என்று சொல்லலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்