Achamillai Achamillai: அரசியல் வாழ்க்கையை நாசுக்காக வெளுத்த படம் - கே.பாலச்சந்தர் அடித்த சிக்சர் இது
நையாண்டி அரசியலை நாசுக்காகக் கூறிய அச்சமில்லை அச்சமில்லை திரைப்படம் இன்றுடன் வெளியாக 39 ஆண்டுகள் ஆகின்றன.

தமிழ் சினிமாவின் இயக்குநர் இமயமாகப் பாராட்டப்படக் கூடியவர் இயக்குநர் கே.பாலச்சந்தர். தமிழ் சினிமாவிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த இவரது வாழ்வில் முக்கிய திரைப்படமாக அமைந்த படங்களில் ஒன்றுதான் அச்சமில்லை அச்சமில்லை.
இந்த திரைப்படத்தில் நடிகை சரிதா ராஜேஷ், டெல்லி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். நல்ல கருத்துக்களைக் கொண்ட நாயகனாக வளம் பெறக்கூடிய ராஜேஷை கதாநாயகியான சரிதா மணந்து கொள்கிறார். வாழ்க்கை இனிமையாகச் சொல்லும் நேரத்தில் திருப்புமுனையாகக் கதாநாயகன் அரசியலில் சேர்கிறார்.
அரசியல் அவரை கொஞ்சம் கொஞ்சமாகக் கெட்டவனாக மாற்றுகிறது. அதே சமயம் வேறு பெண்ணுடன் தொடர்பையும் உருவாக்குகிறது. தன் நல்லவனாக நினைத்து திருமணம் செய்து கொண்டவர் அரசியல் புகுந்து தன்னை மாற்றிக் கொண்டு விட்டார். கட்சி கட்சியாக மாறி மிகவும் மோசமான மனநிலை கொண்டவராக மாறிவிட்டதால் குழந்தையுடன் இருக்கும் சரிதா அவரை கொலை செய்து விடுகிறார். இதுதான் இந்த திரைப்படத்தின் கதை.

