38 Years of Padikkadavan: பட்டிதொட்டியெங்கும் மக்கள் மனம் கவர்ந்த 'படிக்காதவன்' ரஜினியின் சூப்பர் டூப்பர் ஹிட் மூவி!
80களில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற ரஜினியின் படங்களில் படிக்காதவன் ஒரு முக்கியான திரைப்படம் என்பதில் ஐயமில்லை.

இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் உருவான படம் ரஜினியின் படிக்காதவன். கடந்த 1985ம் ஆண்டு நவம்பர் 11 ம் தேதி வெளியானது. நடிகர் சிவாஜி, ரஜினிகாந்த், நாகேஷ், அம்பிகா, ஜெய்சங்கர், ரம்யாகிருஷ்ணன் வடிவுக்கரசி, பூர்ணம் விஸ்வநாதன், தேங்காய் சீனிவாசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ராமசாமி ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருந்தார்.
இந்த படத்தில் சிவாஜியின் மனைவியாக வடிவுக்கரசியும், ரஜினிக்கு ஜோடியாக அம்பிகாவும் நடித்திருந்தனர். இளையராஜா தனது இசையால் படத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்திருந்தார். ராஜா இசையில் உருவான பாடல்கள் மக்களால் கொண்டாடப்பட்டது.
கதை
படத்தில் சூழல் காரணமாக அண்ணன் தம்பிகள் பிரிந்து விடுவார்கள். வக்கீலான சிவாஜி தனது தம்பிகளின் மீது மிகவும் பாசமுடன் வளர்ப்பார். சிவாஜிக்கும் தம்பிகளும் இடையே வயது வித்தியாசம் அதிகம். ஒரு கட்டத்தில் சிவாஜி வடிவுக்கரசியை திருமணம் செய்வார். வேலை காரணமாக சிவாஜி வெளி ஊர் சென்றிருப்பார். அப்போது வடிவுக்கரசி தம்பிகள் இருவரையும் திட்டி வீட்டை விட்டு துரத்தி விடுவார். இந்நிலையில் அண்ணன் தம்பி மூவரும் எப்படி கடைசியாக ஒன்று சேர்ந்தனர் என்பது தான் கதை .