தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  25 Years Of Kadhalar Dhinam: ஆன்லைன் வழி காதல்.. 90ஸ் கிட்ஸ் கொண்டாடிய காதலர் தினம்

25 Years Of Kadhalar Dhinam: ஆன்லைன் வழி காதல்.. 90ஸ் கிட்ஸ் கொண்டாடிய காதலர் தினம்

Aarthi Balaji HT Tamil
Jul 09, 2024 06:32 AM IST

25 Years Of Kadhalar Dhinam: ஆன்லைன் வழியாக காதலாம் என சொல்லி மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரையரங்கிற்குச் சென்று பார்த்த படம், காதலர் தினம்.

ஆன்லைன் வழி காதல்.. 90ஸ் கிட்ஸ் கொண்டாடிய காதலர் தினம்
ஆன்லைன் வழி காதல்.. 90ஸ் கிட்ஸ் கொண்டாடிய காதலர் தினம்

டிவில் இப்போது போடும் போது கூட அமர்ந்து படத்தை பார்த்தால் அவ்வளவு புதியது போல் இருக்கும். அப்போது இருக்கும் ட்ரெண்டை பயன்படுத்தி இயக்குநர் கதிர் இந்த படத்தை எடுத்த காரணத்தினால் ஹிட்டானது.

இந்த படம் தான் நடிகர் குணாலுக்கு முதல் படம். அவரின் முதல் படம் இது தான் என்ற எண்ணம் வாராத அளவு நடிப்பு இருந்தது. அது படத்திற்கு வலுவாக அமைந்தன.

ட்ரெண்டிங் செய்திகள்

அவரை எப்படி தேர்வு செய்தேன் என்பது குறித்து ஒரு முறை பேட்டி அளித்த இயக்குநர் கதிர், "காதலர் தினம் படத்திற்காக ஒரு புதுமுக நடிகரை தேடிக்கொண்டு இருந்தோம். அப்போது ரோட்டில் குணால் நடந்து செல்வதை நான் பார்த்தேன்.

ஹேர் ஸ்டைல்

அவரது ஹேர் ஸ்டைல் மஷ்ரூம் கட் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அது தான் அப்போது ம் பிரபலமானது. ஆனால் பார்ப்பது மிகவும் டிமாண்ட். அந்த ஹேர் ஸ்டைலில் அவரைப் பார்த்தவுடன் இந்த கதைக்கு அவர் சரியாக இருப்பார் என்று எனக்கு தோன்றியது. உடனே என் உதவியாளரைக் கூப்பிட்டு அவரை அழைத்து வரும்படி சொன்னேன்.

அப்படி நடிக்க வந்தவர் தான் குணால் . காதலர் தினம் படத்தில் அவரது ஹேர் ஸ்டைலும் அவரது முக ஜாடையும் படத்திற்கு கச்சிதமாக அமைந்தது. அதன் பிறகு அவரை படத்தில் நடிக்க நாங்கள் ஒப்பந்தம் செய்தோம். அவருக்கும் பட கதை பிடித்து இருந்ததால், சம்மதம் தெரிவித்தார். இந்த படம் வெளிவந்த சமயத்தில் அவர்கள் ஹேர் ஸ்டைலுக்கு என்று பல ரசிகர்கள் இருந்தார்கள்” என்றார்.

மாறப்பட்ட கிளைமாக்ஸ்

முதலில் ராஜா சென்றுவிட்ட நிலையில் ரோஜா மணமேடையில் விஷம் குடித்து இறந்துவிடுவார். அவர் இறந்ததைப் பார்த்து ராஜாவும் அதே இடத்தில் இறந்துவிடுவது போல் பட கிளைமாக்ஸ் அமைந்து இருக்கும். படம் வெளியான போது இதை ரசிகர்கள் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் பின் மீண்டும் ராஜா வந்தவுடன் ரோஜா உயிர்பிழைத்து ஒன்று சேர்வது போல் படம் எடுக்கப்பட்டது.

சக்கப்போடு போட்ட பாடல்

ஒரு பக்கம் பட கதை, ஸ்க்ரீன் பிளே வெற்றி பெற்றால் பாடல் ஒரு பக்கம் சக்கப்போடு போட்டது. காதலர் தினம் படத்தில் இடம் பெற்ற ஆறு பாடல்களையும் ரஹ்மான் சொல்லி அடித்தார். படத்தில் இடம் பெற்ற, நினைச்சப்படி பாடல் இன்று வரை பல திருமண விழாக்களில் ஒளிப்பரப்பட்டு வருகிறது.

ஐ லவ் யூ ராஜா, ஐ லவ் யூ ராஜோ என்ற இந்த வசனம் தான் படத்தின் மையின் ஈர்ப்பு.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்