20 Years of Kaakha Kaakha : சூர்யா – ஜோ காதல் பலமான படம்! ஜீவிஎம்மின் ஜில்லிட வைக்கும் ரொமான்ஸ்! 20 ஆண்டில் காக்க காக்க
20 Years of Kaakha Kaakha : பாண்டியாவின் அண்ணன், சேதுதான் சென்னையின் பெரிய கேங்ஸ்டர். அவனை இந்தக்குழு என்கவுன்டர் செய்துவிட, பாண்டியாவின் ருத்ர தாண்டவம் தொடங்கிவிடும். அதன் பின்னர் பாண்டியாவும் என்கவுன்டர் செய்யப்படுவானா? மாயா – அன்புச்செல்வன் சேர்ந்து வாழ்ந்தார்களா என்பது தான் படத்தின் மீதி கதை.
மாயா – ஏசிபி சார் காதல் உணர்வை கடத்திய விதம் ஜில்லிட வைக்கும். கௌதம் வாசு தேவ் மேனனின் தனி பாணியிலான கதை சொல்லும் விதம். கொஞ்ச நேரம் காட்சிகளாகவும், கொஞ்ச நேரம் வாய்ஸ் ஓவரிலும் கதை சொல்லி இந்த படமும் ரசிகர்களுக்கு வித்யாசமான உணர்வை கொடுக்க வைத்துவிட்டார்.
ஃபிட் அண்ட் பவர் பேக்கான பர்பார்மன்ஸில் சூர்யா! ஷீ இஸ் எ ஃபேன்டசியாக ஜோதிகா! நாங்க நாலு பேரு எங்களுக்கு பயம்னா என்னான்னே தெரியாது. நான் இந்த கண்கள பாத்துகிட்டே இருக்கணும், அப்புறம் ஒரு நாள் செத்து போயிடணும், நச் காதல் வசனங்கள். மெச்சூர்டான ரொமான்ஸ் என அதகளம் செய்ததுடன், அதிரடியாக அசத்திய படம்தான் காக்க காக்க. இந்தப்படத்தில் ஜோதிகா வித்யாசமான மேக்அப்பியில் மிக அழகாக இருப்பார்.
அன்புச்செல்வன், நகர ஏசிபி அதிகாரி, நேர்மையான, தைரியமான ஐபிஎஸ். குற்றப்பிரிவில் வேலை செய்யும் அதிகாரி. அவருக்கு குடும்ப பின்னணி எதுவும் கிடையாது. அன்புச்செல்வனுக்கு உலகமே அவரது நண்பர்கள் மட்டும் தான். அவர்களும் ஐபிஎஸ் அதிகாரிகள், இளமாறன், அருள் மற்றும் ஸ்ரீகாந்த். இந்தக்குழு சென்னையில் நடக்கும் குற்றங்களை கண்டுபிடிக்க சிறப்பு பயிற்சி பெற்றவர்கள்.
சென்னையில் நடக்கும் குற்றங்களுக்கு காரணமாக கேங்ஸ்டர் ரவுடிகளை என்கவுன்டர் செய்வதில் சிறந்தவர்கள். இந்த போலீஸ் அதிகாரிகள் குழு 3 மாதத்தில் 5 ரவுகளை என்கவுன்டர் செய்து சென்னையின் குற்றங்களை குறைத்திருப்பார்கள். இதனால் மனித உரிமை அதிகாரிகள் இவர்களை கன்ட்ரோல் ரூம் பணியில் அமர்த்தியிருப்பார்கள்.
க்ரைம், என்கவுன்ட்டர் என புயலாக பறந்துகொண்டிருக்கும் அன்புச்செல்வன் வாழ்வில், மாயா என்ற பள்ளி ஆசிரியை தென்றலாக நுழைவார். பள்ளி மாணவிகளை கிண்டல் செய்யும் கும்பலிடம் இருந்து மாணவிகளை காப்பாற்ற வேண்டி அவரிடம் வருவார். அந்த அறிமுகம் நட்பாகி, காதலாகி, பின்னர் திருமணம் வரை செல்லும்.
மும்பையில் இருந்து திரும்பி வரும் ரவுடி பாண்டியா, அவனிடம் ஒரு பழக்கம் உண்டு, அவன் எப்போதும் தன் எதிரிகளை அழிக்க மாட்டார். அவர்கள் குடும்பத்தை அழித்து, எதிரிகளை உயிரோடு விட்டு தவிக்க விடுவார். அவன் வந்தது முதல் நகரில் குழந்தை கடத்தல் அதிகரிக்கும், குற்றங்களும் அதிகரிக்கும். இதையடுத்து இந்த 4 பேரும் மீண்டும் பணிக்கு வருவார்கள்.
பாண்டியாவின் அண்ணன், சேதுதான் சென்னையின் பெரிய கேங்ஸ்டர். அவனை இந்தக்குழு என்கவுன்டர் செய்துவிட, பாண்டியாவின் ருத்ர தாண்டவம் தொடங்கிவிடும். அதன் பின்னர் பாண்டியாவும் என்கவுன்டர் செய்யப்படுவானா? மாயா – அன்புச்செல்வன் சேர்ந்து வாழ்ந்தார்களா என்பது தான் படத்தின் மீதி கதை.
ஹாரிஸ் ஜெயராஜின் ஃபிரஷ்ஷான இசையில் பாடல்கள் அனைத்தும் இன்றளவும் ஹிட். உயிரின் உயிரே, உயிரின் உயிரே, என்னைக்கொஞ்சம் மாற்றி, ஒன்றா, ரெண்டா ஆசைகள், ஒரு ஊரில் அழகே உருவாய், தூது வருமா, தூது வருமா என அனைத்து பாடல்களுமே இப்போதும் ப்ளே லிஸ்டில் இருப்பவைதான். 20 ஆண்டுகளை கடந்தும் மனதில் நிறைகிறது மாயா – ஏசிபி சார் காதல்.
டாபிக்ஸ்