Director K. Shankar : பாக்ஸ் ஆபிஸை தகர்த்தெறிந்த தத்ரூப இயக்குநர் சங்கர்!
தென்னிந்தியாவின் மூன்று முதலமைச்சர்களை இயக்கிய கே.சங்கரின் 14வது ஆண்டின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
சினிமாவைப் பொறுத்தவரை ஒரு படத்தில் வெற்றியானது அதில் நடிக்கும் நடிகர்கள் மட்டுமல்லாது கதையும் படத்தின் போக்கைப் பொறுத்து அமையும். ஒரு கப்பலில் ஆயிரம் பேர் பணியாற்றினாலும் கேப்டனின் கட்டளைகளை பொறுத்து கப்பலின் பயணமானது சீராக அமையும். அதுபோல ஒரு திரைப்படத்தில் இயக்குநர்களின் போக்கை பொறுத்தே படத்தின் வெற்றி அமையும்.
தற்போது பல இயக்குநர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிதாகப் பாராட்டப்பட்டு வருகின்றனர். அதற்குக் காரணம் கதையும் அதன் இயக்கமும் தான். இதுபோல எம்ஜிஆர், சிவாஜி காலத்திலும் தொடர் வெற்றிகளை கொடுத்த பல இயக்குநர்கள் இருந்துள்ளனர்.
அப்போது வெற்றிகளை மட்டுமே திரைப்படத்தின் வாயிலாகக் கண்ட இயக்குநர்களில் மிக முக்கியமான இயக்குநர் கே. சங்கர். ஏவிஎம் படத்தயாரிப்பு நிறுவனத்தில் படத்தொகுப்பாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் இவர்.
டாக்டர் என்னும் சிங்கள திரைப்படத்தின் மூலம் தனது இயக்குநர் வாழ்க்கை தொடங்கிய கே சங்கர். தமிழ் சினிமாவை ஆண்ட எம்ஜிஆருக்கு இவர் இயக்கிய அனைத்து படங்களும் பட்டிதொட்டி எங்கும் கொடி கட்டிப் பறந்தது.
சிவாஜி கணேசனை வைத்து இயக்கிய அனைத்து படங்களும் மிகப்பெரிய வெற்றிகளைக் கண்டன. தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்த என்.டி ராமராவ் நடித்த பூகைலாஷ், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நடித்த கௌரி கல்யாணம் உள்ளிட்ட திரைப்படங்கள் அனைத்தும் வெற்றியின் உச்சத்தைக் கண்டன.
அந்த அளவிற்கு இவர் இயக்கிய அனைத்து படங்களும் மிகப்பெரிய வெற்றிப் படங்களாகும். இந்த சூழ்நிலைக்குப் புரியும்படி கூற வேண்டும் என்றால் பாக்ஸ் ஆபிஸை தகர்த்தெறிந்து வசூலைப் பெற்ற திரைப்படங்களாகும்.
இதில் முக்கிய சிறப்பு என்னவென்றால் தென்னிந்தியாவை ஆட்சி செய்த மூன்று முதல்வர்களை இயக்கிய இயக்குநர் என்ற பெருமை இவருக்கு உண்டு. தனக்குத் திருப்தி ஏற்படும் வரை உச்ச நடிகர்களாக இருந்தாலும் வெளுத்து வாங்கி விடுவார் எனக் கூறப்படுகிறது. இவருக்குத் தத்ரூபமான இயக்குநர் என்ற பெயரும் உண்டு. கற்பனையான காட்சிகளையும் இயல்பான முறையில் காட்டக்கூடியவர் இவர்.
உலக அளவில் தமிழ் சினிமா உச்சத்தை அடைந்ததற்குக் காரணம் என்னவென்றால் இது போன்ற இயக்குநர்களின் கதையும் அதன் வெற்றிகளும் தான். மூன்று முதலமைச்சர்களை வைத்து இயக்கிய தத்ரூபமான இயக்குநர் கே.சங்கரின் ௧௪ஆம் ஆண்டின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. படைப்புகளால் வாழ்ந்து கொண்டிருக்கும் கலைஞர்களை நாம் நினைவு கூறுவோம்.
டாபிக்ஸ்