Aadhav Arjuna: ‘40 க்கு 40 கிடைத்தும் பயன் இல்லையா?.. நாயுடுவும், நிதிஷூம் நம் ஆட்கள்; ஆனா ராகுல்காந்தி’ - ஆதவ் அர்ஜூனா!-vck leader aadhav arjuna latest interview about 30 new modi government and rahul gandhi - HT Tamil ,தேர்தல்கள் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Aadhav Arjuna: ‘40 க்கு 40 கிடைத்தும் பயன் இல்லையா?.. நாயுடுவும், நிதிஷூம் நம் ஆட்கள்; ஆனா ராகுல்காந்தி’ - ஆதவ் அர்ஜூனா!

Aadhav Arjuna: ‘40 க்கு 40 கிடைத்தும் பயன் இல்லையா?.. நாயுடுவும், நிதிஷூம் நம் ஆட்கள்; ஆனா ராகுல்காந்தி’ - ஆதவ் அர்ஜூனா!

Kalyani Pandiyan S HT Tamil
Jun 10, 2024 02:04 PM IST

Aadhav Arjuna: “40க்கு 40 தொகுதிகளில் வென்றும் என்ன பயன் என்று கேட்கிறார்கள். உண்மையில் எதிர்க்கட்சியானது மிகச் சரியாக பணியாற்றினால், ஆளுங்கட்சி கிட்டத்தட்ட 90 சதவீதம் ஒழுங்கான ஆட்சியை கொடுக்கும்.” - ஆதவ் அர்ஜூனா!

Aadhav Arjuna: ‘40 க்கு 40 கிடைத்தும் பயன் இல்லையா?.. நாயுடுவும், நிதிஷூம் நம் ஆட்கள்; ஆனா ராகுல்காந்தி’ - ஆதவ் அர்ஜூனா!
Aadhav Arjuna: ‘40 க்கு 40 கிடைத்தும் பயன் இல்லையா?.. நாயுடுவும், நிதிஷூம் நம் ஆட்கள்; ஆனா ராகுல்காந்தி’ - ஆதவ் அர்ஜூனா!

பக்குவப்பட்டிருக்கும் ராகுல்காந்தி 

அந்த பேட்டியில் அவர் பேசும் போது, “40க்கு 40 தொகுதிகளில் வென்றும் என்ன பயன் என்று கேட்கிறார்கள். உண்மையில் எதிர்க்கட்சியானது மிகச் சரியாக பணியாற்றினால், ஆளுங்கட்சி கிட்டத்தட்ட 90 சதவீதம் ஒழுங்கான ஆட்சியை கொடுக்கும். அல்லது, ஆட்சியை நடத்த விடாமலே செய்யலாம். முன்னதாக, மோடியின் பிம்பத்தை உலக அளவில் உடைக்கவே முடியாது என்று மார்க்கெட்டிங் செய்யப்பட்டது. ஆனால் இப்போது மோடியின் பிம்பம் உடைந்து விட்டது என்று நியூயார்க் டைம்ஸ் செய்திதாள் செய்தி வெளியிட்டு இருக்கிறது. 

அந்த செய்தித்தாள் மட்டுமில்லை, இதர இணையதளங்களும் அதேபோன்று கருத்தை முன்வைக்கின்றன. கடந்த பத்து வருடங்களாக மீடியாக்கள் அனைத்தும் மோடி என்ற ஒருவர் சொல்வதை மட்டுமே எழுதிக் கொண்டிருந்தன. இது எதைச் சொல்கிறது என்றால், எதிர்க்கட்சியானது வலிமை ஆகிவிட்டது என்பதை குறிக்கிறது. தற்போது எங்களுடைய கோரிக்கை என்னவென்றால், எதிர்க்கட்சித் தலைவர்  ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் அதிதீவிரமாக செயல்பட வேண்டும். கடந்த பத்து வருடங்களாக அவர் சந்தித்த வலிகள் அவரை ஒரு போராளியாக மாற்றி இருக்கிறது. அவரை நிறைய பக்குவப்படுத்தி இருக்கிறது. 

ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் நாம் கவனம் செலுத்த தேவையில்லை.

அவர் அம்பேத்கரின் புகைப்படத்தை கையில் எடுத்திருக்கிறார். அரசியலமைப்பை கையில் எடுத்திருக்கிறார். ஆகையால் அடுத்த ஐந்து வருடங்களில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் நாம் கவனம் செலுத்த தேவையில்லை. எதிர்க்கட்சியாக மிகச் சிறப்பாக செயல்பட்டாலே போதும், 2029 நாடாளுமன்ற தேர்தலில் 300 தொகுதிகளுக்கு மேல் நாம் வெற்றி பெற முடியும். 

பாஜகவுடன் கூட்டணி அமைத்து இங்கிருந்து தேர்வான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சராக மாறினால், தமிழ்நாட்டிற்கு தேவையான உதவிகள் இன்னும் சிறப்பாக கிடைத்திருக்குமே என்று கேட்கிறீர்கள்? 

ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பாஜகவுடன் கூட்டணி வைப்பது என்பது கிட்டத்தட்ட தற்கொலைக்கு சமமானது. நிதிஷ் குமாரும், சந்திரபாபு நாயுடுவும் சில சூழ்நிலைகள் காரணமாக பாஜகவுடன் கூட்டணி வைத்தார்கள். ஆனால் சந்திரபாபு நாயுடு தேர்தல் பிரசாரத்தில் கூட பாஜகவின் புகைப்படத்தை பயன்படுத்தவில்லை. ஆகையால் இனி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவெல்லாம் எங்கே செல்கிறது என்றே தெரியாது. 

கிட்டத்தட்ட 25 வருடங்களாக மோடி தன்னுடைய அதிகாரத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்தார். ஆனால் இன்று அப்படி இல்லை, கூட்டணியில் வெற்றி பெற்ற உடனேயே எனக்கு அமைச்சரவையில் இந்தெந்த இலாகாக்கள் வேண்டும் என்று கேட்டு வாங்குகிறார்கள். நிதிஷ் குமாரும், சந்திரபாபு நாயுடுவும் சமூகநீதிக்கு ஆதரவானவர்கள். ஆகையால் அவர்கள் நம் கூட்டணியில் இல்லை என்றாலும், நம் சார்பாக மோடியின் அரசாங்கத்திலிருந்து வேலைகளை செய்வார்கள்” என்று பேசினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்கள், அதன் முடிவுகள் குறித்த அனைத்து செய்திகளையும் இந்தப்பிரிவில் பார்க்கலாம்.