BJP: 'வேண்டுமானால் யானை, குதிரை சாப்பிடுங்கள், ஆனால்...' தேஜஸ்வியை விளாசிய ராஜ்நாத் சிங்!
”பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் நவராத்திரி தினத்தன்று மீன் சாப்பிடும் வீடியோவை வெளியிட்டிருந்தார்.”

பீகார் முன்னாள் துணை முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ் நவராத்திரி தினத்தன்று மீன் சாப்பிட்ட வீடியோ வைரல் ஆனது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சரும் பாஜக தலைவருமான ராஜ்நாத் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பீகாரின் பாங்காவில் நடந்த பேரணியில் பேசிய அவர், "முன்னாள் அமைச்சர்கள் இருக்கிறார்கள்... மனசு வலிக்குது... நவராத்திரி பண்டிகை வருகிறது, அவர் பெரிய வறுத்த மீன்களைக் காட்டி, அவற்றை சாப்பிடுகிறார். என்ன செய்தியை சொல்ல விரும்புகிறீர்கள்? மீன், யானை, குதிரை என எதை வேண்டுமானாலும் சாப்பிடுவீர்கள். அதை உலகுக்கு காட்ட உங்களிடம் என்ன இருக்கிறது?" என்று ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பினார்.
மக்களின் உணர்வுகளை புண்படுத்த உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது... வேறு யாரும் காட்டுவதில்லை... இப்படி ஒரு தைரியம் உங்களுக்கு... உனக்கு அந்த அளவுக்கு ஆணவம் இருக்கா?" என ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பி உள்ளார்.
