Vishwaguru: ரேஷன் பொருட்கள் மூலம் 80 கோடி மக்கள் வாழும் நாடு விஸ்வகுரு ஆகுமா? அகிலேஷ் கேள்வி!-can country where 80 crore people survive on free ration become vishwaguru akhilesh - HT Tamil ,தேர்தல்கள் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Vishwaguru: ரேஷன் பொருட்கள் மூலம் 80 கோடி மக்கள் வாழும் நாடு விஸ்வகுரு ஆகுமா? அகிலேஷ் கேள்வி!

Vishwaguru: ரேஷன் பொருட்கள் மூலம் 80 கோடி மக்கள் வாழும் நாடு விஸ்வகுரு ஆகுமா? அகிலேஷ் கேள்வி!

Kathiravan V HT Tamil
Apr 14, 2024 08:47 PM IST

”மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி மற்றும் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்”

அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ் (PTI)

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் பேசிய அவர், பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், நாட்டில் 80 கோடி மக்களுக்கு மாதந்தோறும் இலவச ரேஷன் வழங்கப்படுவதாக பாஜக கூறுவதை குறிப்பிட்டு பேசினார். 

"80 கோடி மக்கள் இலவச ரேஷனில் வழங்கும் பொருட்கள் மூலம் உயிர்வாழும் ஒரு நாடு 'விஸ்வகுரு (உலகளாவிய தலைவர்)' ஆக முடியுமா" என்று அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பி உள்ளார். 

மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி மற்றும் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

"தேர்தலில் சமாஜ்வாதி ஒரு வரலாற்று வெற்றியைப் பதிவு செய்யும். இந்த முறை மேற்கில் இருந்து (உத்தரப்பிரதேசத்தின் ஒரு பகுதி) வீசும் மேற்குக் காற்று, இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளது என அவர் கூறினார். 

அவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவாரா என்பது குறித்து, “தேதி வரட்டும்” அகிலேஷ் யாதவ் பதில் அளித்தார். 

இந்த தேர்தல் அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றும் தேர்தல் என்றும் அவர் கூறினார்.

"இளைஞர்களுக்கு தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியாதா? நிரந்தர வேலைகளைப் பெற விரும்புபவர்கள் அக்னிவீர் திட்டத்தில் திருப்தி அடைகிறார்கள். வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று கூறி வாக்குகளைப் பெற்ற விவசாயிகளுக்காக மூன்று கருப்புச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன என அகிலேஷ் யாதவ் கூறினார். 

மீரட் நாடாளுமன்றத் தொகுதியில் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் 2024:

543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறும். முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் மே 7ம் தேதியும், நான்காம் கட்ட தேர்தல் மே 13ம் தேதியும், 5-ம் கட்ட தேர்தல் மே 20-ம் தேதியும், 6-ம் கட்ட தேர்தல் மே 25-ம் தேதியும், கடைசி மற்றும் 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதியும் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் 2024

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27ஆம் தேதி நிறைவடைந்தது.

மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 30ஆம் தேதி உடன் நிறைவடைந்ததால் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

Whats_app_banner
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்கள், அதன் முடிவுகள் குறித்த அனைத்து செய்திகளையும் இந்தப்பிரிவில் பார்க்கலாம்.