MI vs RR Live Score: மூன்று பேர் கோல்டன் டக்! போல்ட், சஹால் கூட்டணியிடம் சிக்க தவித்த மும்பை பேட்ஸ்மேன்கள்-yuzvendra chahal trent boult helps to restrict mumbai indians by 125 runs - HT Tamil ,மட்டைப்பந்து செய்திகள்
தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Mi Vs Rr Live Score: மூன்று பேர் கோல்டன் டக்! போல்ட், சஹால் கூட்டணியிடம் சிக்க தவித்த மும்பை பேட்ஸ்மேன்கள்

MI vs RR Live Score: மூன்று பேர் கோல்டன் டக்! போல்ட், சஹால் கூட்டணியிடம் சிக்க தவித்த மும்பை பேட்ஸ்மேன்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 01, 2024 09:33 PM IST

உள்ளூர் மைதானத்தில் களமிறங்கிய முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பவுலிங்கை தாக்குபிடிக்க முடியாமல் மும்பை இந்தியன்ஸ் 125 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

மும்பை பேட்டிங்கை காலி செய்த சஹால், போல்ட் கூட்டணி
மும்பை பேட்டிங்கை காலி செய்த சஹால், போல்ட் கூட்டணி (AP)

அத்துடன் மும்பை இந்தியன்ஸ் புதிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும் கேப்டனாக முதல் போட்டியில் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுகிறார். முன்னதாக டாஸ் போட வந்த பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் கோஷங்கள் எழுப்பினர். ரோகித் ரோகித் என அவரை பார்த்து கத்தினார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங்கில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்துள்ளது.

அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 34, திலக் வர்மா 32, டிம் டேவிட் 17 ரன்கள் எடுத்தனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பவுலிங் செய்து மும்பை பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளித்தனர். ட்ரெண்ட் போல்ட், யஸ்வேந்திர சஹால் தலா 3 விக்கெட்டை கைப்பற்றினர். நந்த்ரே பர்கர் 2, ஆவேஷ் கான் ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

மூன்று பேர் டக் அவுட்

மும்பை அணிக்கு மிகவும் மோசமான தொடக்கம் அமைந்தது. முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் ரோகித் ஷர்மா, கடைசி பந்தில் நமன் நமன் திர் ஆகியோர் அடுத்தடுத்த பந்தில் அவுட்டானார்கள்.

இருவரும் தாங்கள் எதிர்கொண்ட முதல் பந்தில் அவுட்டான நிலையில் கோல்டன் டக் அவுட்டாகினர். இவர்களை தொடர்ந்து இம்பேக்ட் வீரராக பேட் செய்ய வந்த டீவால்ட் ப்ரீவிஸ் முதல் பந்திலேயே அவுட்டாகி கோல்டன் டக் அவுட்டானார்.

முதல் நான்கு ஓவர்களுக்குள் டாப் 4 விக்கெட்டை இழந்து மும்பை இந்தியன்ஸ் தடுமாறியது.

பாண்ட்யா - திலக் வர்மா பார்ட்னர்ஷிப்

இக்கட்டான நிலையில் இருந்த அணியை பொறுப்பான பேட்டிங் மூலம் திலக் வர்மா - ஹர்திக் பாண்ட்யா மீட்டனர். இருவரும் இணைந்து 56 ரன்கள் சேர்த்தனர்.

பாண்ட்யா 34 ரன்கள் எடுத்து சஹால் பந்தை தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த வந்த பியூஷ் சாவ்லா 3 ரன்னில் வெளியேறினார்.

இதற்கு அடுத்தபடியாக நிதானமாக பேட் செய்து வந்த திலக் வர்மா 32 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.

மும்பை அணியின் கடைசி பேட்ஸ்மேனாக இருந்த டிம் டேவிட் 17 ரன்கள் எடுத்து, அவரும் கடைசி நேரத்தில் பெவிலியன் திரும்பினார்.

சஹால், போல்ட் கலக்கல்

ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலர் யஸ்வேந்திர சஹால் அற்புதமாக பவுலிங் செய்து மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்களை திணறடித்தார். 4 ஓவரில் வெறும் 11 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மொத்தம் 16 டாட் பந்துகளை வீசினார்.

இதேபோல் வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் அபாரமாக பந்து வீசி 4 ஓவரில் 22 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.