Team India: யுவராஜ் 6 சிக்ஸர்கள், கோலி தாண்டவம்..! டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவின் மறக்க முடியாத தருணங்கள்
2007 முதல் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை நடந்த இந்திய அணி பல்வேறு தனித்துவமான சாதனைகளையும், வெற்றியையும் மேற்கொண்டுள்ளது. டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவின் மறக்க முடியாத தருணங்கள் சிலவற்றை பார்க்கலாம்.

டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவின் மறக்க முடியாத தருணங்கள் (Getty Images)
டி20 உலகக் கோப்பை தொடர் இந்த முறை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. முதல் முறையாக அமெரிக்கா நாட்டில் உலகக் கோப்பை டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
ஒன்பதாவது டி20 உலகக் கோப்பை தொடராக இது அமைந்திருக்கும் நிலையில் மொத்தம் 20 அணிகள் நான்கு பிரிவுகளாக விளையாடி வருகின்றன. இந்த தொடரில் இந்தியா குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ளது. இதில் பாகிஸ்தான், யுஎஸ்ஏ, கனடா, அயர்லாந்து ஆகிய அணிகள் உள்ளன.
2007 முதல் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதல் டி20 உலகக் கோப்பையை வென்ற அணி என்ற பெருமை இந்தியாவுக்கு உள்ளது. இதன் பின்னர் ஒரு முறை இறுதிப்போட்டி, இரண்டு முறை அரையிறுதி வரை முன்னேறியுள்ளது.