Yashasvi Jaiswal: பவர்ப்ளே முடிவதற்குள் அரைசதம்! அதிரடி காட்டி ஆஸ்திரேலியா பவுலர்களை மிரட்டிய ஜெய்ஸ்வால்
சீன் அபாட் வீசிய ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் மட்டும் மூன்று பவுண்டரி, இரண்டு சிக்ஸர்கள் என 24 ரன்களை அடித்தார் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் இரண்டாவது டி20 போட்டி திருவனந்தபுரத்திலுள்ள கிரீன் பீல்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மேத்யூ வேட் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
இதையடுத்து முதலில் பேட் செய்த இந்தியா அதிரடியாக பேட் செய்து ரன்குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. இளம் இடது கை பேட்ஸ்மேனான யஷஸ்வி ஜெய்லவால் தொடக்கம் முதலே பவுண்டரி, சிக்ஸர்களை பறக்கவிட்டு ஆஸ்திரேலியா பவுலர்களை மிரட்டி வருகிறார்.
ஆட்டத்தின் மூன்றவது ஓவரை சீன் அபாட் பந்து வீசிய நிலையில், அந்த ஓவரில் மட்டும் 3 பவுண்டரி, 2 சிக்ஸர் என 24 ரன்கள் எடுத்தார். அதிரடியான பேட்டிங்கின் மூலம் ரன்குவிப்பில் ஈடுபட்டு வந்த ஜெய்ஸ்வால் 24 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
இதைத்தொடர்ந்து அரைசதம் பூர்த்தி செய்தவுடன் அடுத்த பந்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 25 பந்துகளில் 53 ரன்கள் எடுத்த ஜெய்ஸ்வால், தனது இன்னிங்ஸில் 9 பவுண்டரி, 2 சிக்ஸர்களை அடித்தார். அவர் அவுட்டாகும்போது அணியின் ஸ்கோர் 5.5 ஓவரில் 77 ரன்கள் என இருந்தது.
ஜெய்ஸ்வால் அவுட்டுக்கு பிறகு களத்தில் இருந்து வரும் ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் ஆகியோர் தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
டாபிக்ஸ்