WPL 2024 Season 2: மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் சீசன் 2 இன்று தொடக்கம்: மும்பை-டெல்லி மோதல்-wpl 2024 season 2 mi face dc in opener on february 23 final on march 17 read more - HT Tamil ,மட்டைப்பந்து செய்திகள்
தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Wpl 2024 Season 2: மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் சீசன் 2 இன்று தொடக்கம்: மும்பை-டெல்லி மோதல்

WPL 2024 Season 2: மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் சீசன் 2 இன்று தொடக்கம்: மும்பை-டெல்லி மோதல்

Manigandan K T HT Tamil
Feb 23, 2024 06:00 AM IST

இந்த ஆண்டு டபிள்யூ.பி.எல் தொடரில் மொத்தம் 22 போட்டிகள் நடைபெறும், புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பிடிப்பவர்கள் எலிமினேட்டர் போட்டியில் மோதுவார்கள்

மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் கோப்பையுடன் 5 அணிகளின் கேப்டன்கள்
மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் கோப்பையுடன் 5 அணிகளின் கேப்டன்கள் (AFP)

டபிள்யூ.பி.எல்-இன் அனைத்து போட்டிகளையும் ஜியோ சினிமாவில் கண்டு ரசிக்கலாம். ஸ்போர்ட்ஸ் 18 சேனலிலும் நேரலையில் ஒளிபரப்பாகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியை ஹர்மன்ப்ரீத் கவுர் வழிநடத்துகிறார். இவர் இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் கேப்டனும் ஆவார். டெல்லி கேபிடல்ஸ் அணியை மெக் லேனிங் வழிநடத்துகிறார். இவர் ஆஸி., மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு சீசனும் பெங்களூரு மற்றும் டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மும்பை, நவி மும்பையில் நடந்தது நினைவுகூரத்தக்கது. டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் மார்ச் 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் எலிமினேட்டர் மற்றும் இறுதிப் போட்டி நடைபெறும்.

மேலும், மார்ச் 5ம் தேதி முதல் டெல்லியில் லீக் ஆட்டங்களும் நடைபெறும்.

இந்த ஆண்டு டபிள்யூ.பி.எல் தொடரில் மொத்தம் 22 போட்டிகள் நடைபெறும், இதில் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். 2-வது மற்றும் 3-வது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் சுற்றில் மோதும். அதில் ஜெயிக்கும் அணி பைனலுக்கு முன்னேறும்.

இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி முதல் சீசனில் கோப்பையை வென்றது.

கடந்த மாதம் நடந்த டபிள்யூ.பி.எல் மினி ஏலத்தின் போது மொத்தம் 165 வீராங்கனைகள் 30 இடங்களுக்கு ஏலத்தில் இருந்தனர். அவர்களில் காஷ்வீ கௌதம் மற்றும் விருந்தா தினேஷ் போன்ற சில அற்புதமான திறமைகளை இந்த சீசனில் காணலாம்.

WPL 2024 முழு அட்டவணை

  • பிப்ரவரி 23- மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் (பெங்களூரு)
  • பிப்ரவரி 24:- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – யு.பி.வாரியர்ஸ் பெங்களூரு
  • பிப்ரவரி 25:- குஜராத் ஜெயன்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் (பெங்களூரு)
  • பிப்ரவரி 26:- உ.பி. வாரியர்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் (பெங்களூரு)
  • பிப்ரவரி 27 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் ஜெயன்ட்ஸ் (பெங்களூரு)
  • பிப்ரவரி 28 - மும்பை இந்தியன்ஸ் vs உ.பி. வாரியர்ஸ் (பெங்களூரு)
  • பிப்ரவரி 29: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – டெல்லி கேப்பிடல்ஸ் (பெங்களூரு)
  • மார்ச் 1: உ.பி.வாரியர்ஸ் vs குஜராத் ஜெயன்ட்ஸ் (பெங்களூரு)
  • மார்ச் 2:- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs மும்பை இந்தியன்ஸ் (பெங்களூரு)
  • மார்ச் 3 - குஜராத் ஜெயன்ட்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் (பெங்களூரு)
  • மார்ச் 4:- உபி வாரியர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (பெங்களூரு)
  • மார்ச் 5 - டெல்லி கேப்பிடல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்(டெல்லி)
  • மார்ச் 6:- குஜராத் ஜெயன்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (டெல்லி)
  • மார்ச் 7:- உ.பி.வாரியர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் (டெல்லி)
  • மார்ச் 8:- டெல்லி கேபிடல்ஸ் vs உ.பி வாரியர்ஸ் (டெல்லி)
  • மார்ச் 9 - மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் ஜெயன்ட்ஸ் (டெல்லி)
  • மார்ச் 10 - டெல்லி கேப்பிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (டெல்லி)
  • மார்ச் 11 - குஜராத் ஜெயன்ட்ஸ் vs உ.பி வாரியர்ஸ் (டெல்லி)
  • மார்ச்12 - மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (டெல்லி)
  • மார்ச் 13 - டெல்லி கேபிடல்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் (டெல்லி)
  • மார்ச் 15 - எலிமினேட்டர் (டெல்லி)
  • மார்ச் 17- இறுதிப் போட்டி (டெல்லி)

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.