WPL 2024: கார் கண்ணாடியை உடைத்த எலிசா பெர்ரி - வெற்றியுடன் கம்பேக் கொடுத்து கெத்து காட்டும் ஆர்சிபி
பேட்டிங்கில் அதிரடியும், பவுலிங்கில் நெருக்கடியும் வெளிப்படுத்திய ஆர்சிபி சீசனின் மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

பந்தை சிக்ஸருக்கு பறக்கவிடும் எலிசா பெர்ரி (PTI)
மகளிர் ப்ரீமியர் லீக் தொடரின் 11வது போட்டி ஆர்சிபி மகளிர் - யுபி வாரியர்ஸ் மகளிர் அணிக்கு எதிராக பெங்களுருவில் நடைபெற்றது. இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்றிருந்த நிலையில் இந்த போட்டியில் களமிறங்கியது. இதையடுத்து டாஸ் வென்று யுபி வாரியர்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தது.
ஆர்சிபி அதிரடி ஆட்டம்
முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது. யுபி வாரியர்ஸ் பவுலர்களுக்கு எதிராக ஆர்சிபி பேட்டர்கள் அதிரடி ருத்ரதாண்டவம் ஆடினார்கள்.
ஆர்சிபி கேப்டன், ஓபனிங் பேட்டர் ஸ்மிருதி மந்தனா அரைசதம் அடித்ததோடு 50 பந்துகளில் 80 ரன்கள் அடித்தார். இவருக்கு அடுத்தபடியாக எலிசா பெர்ரி அரைசதமடித்து 58 ரன்கள் அடித்தார்.
