WPL 2024: எல்லிஸ் பெர்ரி கலக்கல் ஆட்டம்! முக்கிய போட்டியில் மும்பையை பழிதீர்த்த ஆர்சிபி - ப்ளே ஆஃப்புக்கு தகுதி
ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும் முக்கிய போட்டியில் எல்லிஸ் பெர்ரி சிறப்பான ஆல்ரவுண்ட் ஆட்டத்தால் ஆர்சிபி மகளிர் அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வீழ்த்தியுள்ளது.

மகளிர் ப்ரீமியர் லீக் தொடரின் 19வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மகளிர் - ஆர்சிபி மகளிர் அணிகளுக்கு இடையே டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் ஏற்கனவே ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் வாய்ப்பை பெற முடியும் என்ற கட்டாயத்தில் ஆர்சிபி அணி இருந்தது.
மும்பை பேட்டிங்
இதையடுத்து டாஸ் வென்ற ஆர்சிபி மகளிர் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பவுலிங்கை தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து பேட் செய்த மும்பை இந்தியன்ஸுக்கு ஓபனிங் பேட்டர்கள் நல்ல தொடக்கத்தை தந்தனர்.
முதல் விக்கெட்டுக்கு மேத்யூஸ் - சஞ்சனா இணைந்து 43 ரன்கள் சேர்த்தனர். மேத்யூஸ் 26 ரன்களில் அவுட்டானார். இவர் அவுட்டான அடுத்த சில ஓவர்களில் நன்கு பேட் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டு வந் சஞ்சீவன் சஞ்சனா 30 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.
