WPL 2024: நான்கு தொடர் தோல்வி! பரிதாப நிலையில் குஜராத் ஜெயிண்ட்ஸ்
இந்த சீசனில் இதுவரை விளையாடிய அனைத்து அணிகளுக்கும் எதிராக தோல்வியை தழுவியிருக்கும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி முதல் வெற்றிக்கான தேடலை தொடர்ந்து வருகிறது

குஜராத் பேட்டர் ஆஷ்லே கார்ட்னரை ஸ்டம்பிங் முறையில் அவுட்டாக்கிய யஸ்திகா பாட்யா (PTI)
மகளிர் ப்ரீமியர் லீக் தொடரின் 10வது போட்டி டெல்லி கேபிடல்ஸ் மகளிர் - குஜராத் ஜெயிண்ட்ஸ் மகளிர் அணிகளுக்கு இடையே பெங்களுருவில் நடைபெற்றது. ஹாட்ரிக் தோல்வியை தழுவிய குஜராத் ஜெயிண்ட்ஸ் முதல் வெற்றியை பெற்றாக வேண்டிய நிர்பந்தத்தில் களமிறங்கியது. இதையடுத்து டாஸ் வென்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.
டெல்லி அதிரடி பேட்டிங்
முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. ஓபனரும், அணியின் கேப்டனுமான மெக் லேனிங் நிதானமும், தேவைப்படும் போது அதிரடியும் காட்டி விளையாடினார். அரைசதமடித்த அவர் 55 ரன்கள் எடுத்தார்.
இவருக்கு அடுத்தபடியாக ஆலிஸ் கேப்சி 27, அனாபெல் சதர்லாந்து 20 ரன்கள் எடுத்தனர். இந்திய பேட்டர்கள் ஷெபாலி வர்மா, ஜேமிமா ரோட்ரிக்ஸ் பெரிய ஸ்கோர் அடிக்காமல் ஏமாற்றினர்.