World Cup 2023: இங்கிலாந்தை துவம்சம் செய்து இலங்கை வெற்றி! நடப்பு சாம்பியனை இனி மற்ற அணிகள் தான் காப்பாதனும்
World Cup 2023, ENG vs SRI Result: பேட்டிங்கில் முழுமையாக கோட்டை விட்ட இங்கிலாந்து, பவுலிங்கில் எந்தவொரு மேஜிக்கும் நிகழ்த்தாத நிலையில் இலங்கை அணி 146 பந்துகள் எஞ்சி இருக்க வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலிலும் முதல் முறையாக டாப் 5 இடத்தை பிடித்துள்ளது.
உலகக் கோப்பை 2023 தொடரின் 25வது போட்டி இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையே பெங்களூருவில் நடைபெற்றுள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தனர்.
இங்கிலாந்து அணியில் கிறஸ் வோக்ஸ், லியாம் லிவிங்ஸ்டன், மொயின் அலி ஆகியோர் இன்றைய போட்டியில் சேர்க்கப்பட்டனர். அதே போல் இலங்கை அணியில் அனுபவ ஆல்ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ், லஹிரு குமாரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து இலங்கை பவுலர்களின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 33.2 ஓவரில் 156 ரன்களுக்கு ஆல் ஆவுட்டாகியது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 43 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக ஓபனிங் பேட்ஸ்மேன்களான பேர்ஸ்டோ 30, டேவிட் மாலன் 28 ரன்கள் எடுத்தனர்.
இலங்கை பவுலர்களின் லஹிரு குமாரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஏஞ்சலோ மேத்யூஸ், காசுன் ரஜிதா ஆகியோர் தலா 2 விக்கெட்டை எடுத்தனர். ஸ்பின்னர் மகேஷ் தீக்ஷனா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து 157 ரன்கள் என்ற எளிய இலக்கை சேஸ் செய்ய களமிறங்கிய இலங்கை அணி, 25.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஓபனிங் பேட்ஸ்மேன் பாதும் நிஸ்ஸங்கா 77, சதீர சமரவிக்ரமா 65 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இவர்கள் இருவரும் இணைந்து 137 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இங்கிலாந்து பவுலர்களில் டேவிட் வில்லே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆரம்பத்தில் 5.2 ஓவர்களில் முதல் 2 விக்கெட்டை இங்கிலாந்து பவுலர்கள் வீழ்த்தி நெருக்கடி அளித்தனார். ஆனால் அதன் பிறகு இலங்கை பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய நிலையில் இங்கிலாந்து பவுலர்கள் பெரிதாக எந்த மாயாஜாலமும் நிகழ்த்தவில்லை.
இங்கிலாந்து அணியின் மூன்று முக்கிய விக்கெட்டுகளை தூக்கிய லாஹிரு குமாரா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்ப்டடார்.
இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன் புள்ளிப்பட்டியலில் ஒரே புள்ளிகளுடன் இலங்கை 7வது இடத்திலும், இங்கிலாந்து 8வது இடத்திலும் இருந்தது. இதையடுத்து இலங்கை வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
நடப்பு சாம்பியனான இங்கிலாந்து 9வது இடத்துக்கு பின் தங்கியுள்ளது. இனி வரும் 4 போட்டிகளில் கட்டாயமாக வெற்றி பெறுவதோடு மட்டுமில்லாமல் நல்ல ரன் ரேட்டையும் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய நெருக்கடி அந்த அணிக்கு ஏற்பட்டுள்ளது.
இனி இங்கிலாந்தின் அரையிறுதி வாய்ப்பானது மற்ற அணிகளில் வெற்றி தோல்விகளை வைத்தே முடிவு செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து தனது அடுத்த போட்டியில் இந்தியாவை வரும் ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்